
‘’சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் பாமக கொடி போன்று வானத்தில் மூவர்ண பொடி தூவப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இந்த பதிவின் தலைப்பில் ‘’ இவனுங்க வேற சாகசம் சொல்லிட்டு பாமக கட்சி கொடியை பறக்க விடறாங்க.
அதுவும் திராவிட முதலமைச்சர் முன்னால்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் ஒரு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அதில், ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, நடுவானில் மூவர்ண பொடி தூவும் காட்சி இடம்பெற்றுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
IAF சார்பாக சென்னை விமான சாகச நிகழ்ச்சி 2024 பிரமாண்ட ஏற்பாடுகளுடன் சமீபத்தில் நடைபெற்றது.
Hindu Tamil Link l NDTV Link l Hindustan Times Link
இந்த நிகழ்ச்சியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, நடுவானில் மூவர்ண பொடி தூவுவது போன்றும், அது பாமக கொடி நிறத்தில் இருந்தது என்றும், சிலர் தகவல் பரப்புவதால், நாம் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். இதன்படி, குறிப்பிட்ட வீடியோவில் இருந்து, ஃபிரேம் ஒன்றை பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் தகவல் தேடினோம்.

அப்போது, இது Romania நாட்டில் நடந்த Bucharest International Air Show தொடர்பான வீடியோ என்று, தெரியவந்தது.
முழு வீடியோ இதோ…
கூடுதல் ஆதாரம்…
European Air Shows l Visit Bucharest Today l Romania Insider
Romanian Flag மற்றும் PMK Flag ஒரே மாதிரி உள்ளதால், வேண்டுமென்றே தவறான புரிதலுடன் இவ்வாறு பாமக ஆதரவாளர்கள் தகவல் பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் பாமக கொடி போன்று மூவர்ண பொடி தூவப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
