உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’ உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் 41 பேரும் மீட்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link 

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில்க்யாரா – தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த 2023, நவம்பர் 12-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் கடும் போராட்டத்திற்குப் பின்னர், அவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

Dinamani Link l India Today Link l timesofindia 

இந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோ போன்றவை பகிரப்படுகின்றன. ஆனால், இவற்றில் பலவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களாக உள்ளன. 

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு முரணான தகவல்தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ செய்தியும். ஏனெனில், குறிப்பிட்ட சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்படும் முன்பாக, NDRF தரப்பில் ஒத்திகை பார்க்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இது. 

இதுதொடர்பாக ஏற்கனவே நமது இந்தி மொழிப் பிரிவினர் விரிவான ஃபேக்ட்செக் செய்து, கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த லிங்க் கீழே தரப்பட்டுளளது. 

Fact Crescendo Hindi Link 

எனவே, வேறொரு வீடியோவை எடுத்து, முன்னுக்குப் பின் முரணான தகவல் பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team 

Result: MISLEADING