மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் சோனியா அமர்ந்திருக்கும் படம் உண்மையா!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

சோனியா காந்தி மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் அமர்ந்திருப்பது போன்று போட்டோஷாப் செய்யப்பட்ட அநாகரீகமாக  படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

வதந்தியின் விவரம்:

Facebook LinkArchived Link

மாலத்திவு முன்னாள் அதிபர் மாமூன் மடியில் சோனியா காந்தி நெருக்கமாக அமர்ந்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “ஒவ்வொன்றாக அம்பலம் ஏறுகிறது அன்டானியோ மைனோவின் விஷமங்கள்.. கொரானா லாக்டௌன் ‘நல்லது’…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sowmya R என்பவர் 2020 ஏப்ரல் 23ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தது போலவும் அந்த காலத்து பிரிண்ட் அவுட் படம் நிறம் மங்கி, தேய்ந்து போனது போலவும் படத்தை பகிர்ந்துள்ளனர். பார்க்கும்போதே போலியானது என்று தெரிகிறது. ஆனாலும், இதை உண்மை என்று நம்பியோ சோனியா காந்தியை இழிவுபடுத்தும் நோக்கிலோ இதை பலரும் ஷேர் செய்து வருவது தெரிகிறது. எனவே, இந்த படத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்தோம்.

afpforum.comArchived Link

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இது தொடர்பான அசல் படங்கள் நமக்கு கிடைத்தன. 2005ம் ஆண்டு இந்தியா வந்த மாலத்தீவு நாட்டின் அப்போதைய அதிபர் மாமூன் அப்துல் கயூம் உடன் சோனியா பேசும் படங்கள் நமக்கு கிடைத்தன. இந்த படத்தை ஏ.எஃப்.பி செய்தி ஊடகத்தின் புகைப்பட கலைஞர் எடுத்திருப்பதும், தற்போது இந்த புகைப்படத்தை கெட்டி இமேஜஸ் தன்னுடைய தளத்தில் வைத்திருப்பதும் தெரிந்தது. 

rudebutgood.blogspot.comArchived Link

வேறு சில இணையதளம், பிளாகுகளில் இந்த புகைப்படம் இருப்பதைக் காண முடிந்தது. சோனியா காந்தி, மாலத்தீவு முன்னாள் அதிபர் அமர்ந்திருக்கும் படத்தை எடிட் செய்து சோனியா காந்தியை மாலத்தீவு அதிபர் அருகில் அமர வைத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது. இதன் அடிப்படையில் சோனியா பற்றி விஷமத்தனமாக பதிவு செய்யப்பட்டம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் சோனியா அமர்ந்திருக்கும் படம் உண்மையா!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •