ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதா? 

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’ஆண்கள் கருத்தடை சாதனம் ஆணுறைக்கு (Condom) 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ஆண்கள் கருத்தடை சாதனம் ஆணுறைக்கு (Condom) 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்று சமீபத்தில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது. 

கடந்த டிசம்பர் 21, 2024 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய முழு விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

PIB Press Release

மேற்கண்ட ஊடக அறிக்கையில் எந்த இடத்திலும் ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதித்துள்ளதாக, எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், இந்திய அளவில் அதிகபட்சமாக, விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரம்பு 28% மட்டுமே. அதற்கு மேல் கிடையாது.  

India Filings l Bank Bazaar l dcmsme.gov

அடுத்தப்படியாக, இந்தியாவில் ஆணுறைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்று தகவல் தேடினோம். 

இதற்காக, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://cbic-gst.gov.in/gst-goods-services-rates.html) சென்று, விவரம் தேடினோம். அப்போது, ஆணுறைக்கு (Male Condoms) 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிட்டுள்ளதைக் கண்டோம். அதாவது, ரப்பர் கலந்த கருத்தடை சாதனம் என்றால் 18% ஜிஎஸ்டியும், இந்தியாவிலேயே தயாரித்த (பிளாஸ்டிக் கலந்த) கருத்தடை சாதனம் என்றால் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தெரியவந்தது. 

இதன்மூலமாக, ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி வரி எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெளிவாகிறது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் உண்மையல்ல; யாரோ ஒருவர் நகைச்சுவை நோக்கில் இதனை முதலில் பகிர, மற்றவர்கள் உண்மை என்று நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Insight