சைக்கிள் ஓட்டிய சிறுவனுக்கு அபராதம் விதித்த போலீஸ் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ஹெல்மெட் இல்லாமல், சைக்கிள் ஓட்டிய சிறுவனுக்கு அபராதம் விதித்த போலீஸ்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’சைக்கிள்க்கு பைன்னா… *எங்க போலீஸ் ஸ்காட்லாண்ட் போலீஸ்க்கு இணையாக்கும், அவங்களை மீறி என்ன தைரியம் இருந்தா சைக்கிள் ஓட்டிட்டு போவே ?*,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2   

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2019ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் என்று தெரியவந்தது.

தருமபுரி மாவட்டம், எறையூர் என்ற இடத்தில் பள்ளி மாணவன் ஒருவன் போக்குவரத்து நிரம்பிய சாலை நடுவே, ஹேண்டில்பார் பிடிக்காமல், இரண்டு கைகளையும் திறந்தபடி, சைக்கிள் ஓட்டிவந்துள்ளான். இதையடுத்து, அவனை வழிமறித்த போலீசார், தகுந்த எச்சரிக்கை செய்து, அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த சிலர், அந்த மாணவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் 2019ம் ஆண்டே வதந்தி பரப்பியுள்ளனர். அப்போதே போலீசார் இதுபற்றி உரிய விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், இன்றளவும் இந்த வதந்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:சைக்கிள் ஓட்டிய சிறுவனுக்கு அபராதம் விதித்த போலீஸ் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Written By: Pankaj Iyer  

Result: Misleading