மன்மோகன் சிங் பெயரில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஸ்காலர்ஷிப் வழங்குகிறதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

800 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மன்மோகன் சிங் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது குறிப்பிட்ட பதிவு கடந்த சில ஆண்டுகளாகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்று என தெரியவந்தது.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தி உண்மையா என தகவல் தேடியபோது, நமக்கு இப்படியான ஸ்காலர்ஷிப் எதுவும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என தெரியவந்தது. இதுதொடர்பாக, University of Oxford பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, தகவல் தேடினோம். அதில் எங்கேயும் மன்மோகன் சிங் பெயர் இல்லை. இதர பெயர்களில் ஏராளமான ஸ்காலர்ஷிப் தரப்படுவதையும் கண்டோம்.

ox.ac.uk scholarships list

ஆனால், இதில் மன்மோகன் சிங் பெயர் எங்கேயும் இடம்பெறவில்லை. அதேசமயம், மன்மோகன் சிங் பெயரில் University of Cambridge கீழ் செயல்படும் St John’s College சார்பாக, ஸ்காலர்ஷிப் தரப்படுவதாக விவரம் கிடைத்தது.

joh.cam.ac.uk manmohan singh scholars

இதுதவிர, மன்மோகன் சிங் கடந்த 1962ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு முடித்துள்ளார். அது மட்டுமே அவருக்கும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு. எனவே, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், மன்மோகன் சிங் பெயரில் ஸ்காலர்ஷிப் தரப்படுவதை எடுத்து, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் பெயரை சேர்த்து, வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:மன்மோகன் சிங் பெயரில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஸ்காலர்ஷிப் வழங்குகிறதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False