கேதன் தேசாய் பெயரை குறிப்பிட்டு அவசர கதியில் பகிரப்படும் வாட்ஸ்ஆப் வதந்தியால் சர்ச்சை…

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’கேதன் தேசாய் பற்றிய உண்மைகள்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் மிகவும் வைரலாக இதனைப் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
முதலில், குஜராத் மெடிக்கல் கவுன்சில் தலைவராக, கேதன் தேசாய் பெயர் இடம்பெற்றுள்ளதா என்று கடந்த 2014ம் ஆண்டு முதலாக விவரம் தேடினோம். ஆனால், அவரது பெயர் இடம்பெறவில்லை. முழு பட்டியலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

gmcgujarat.org name list

அதேசமயம், குஜராத் மெடிக்கல் கவுன்சில் உறுப்பினராக தேசாய் உள்ளார். அவரது பெயர் கீழ்க்கண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

gmcgujarat.org council members list
இதன்படி, சமீப காலத்தில், மோடி பிரதமர் பதவிக்கு வந்த பின், 2014 முதலாக, குஜராத் மெடிக்கல் கவுன்சில் தலைவர் பதவியை தேசாய் வகித்ததில்லை எனவும், கவுன்சிலில் உறுப்பினராக மட்டுமே உள்ளார் எனவும் தெரியவருகிறது.

அடுத்தப்படியாக, இவர் 2001ல் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு, இந்திய மெடிக்கல் அசோசியேஷனின் தலைவராக, 2001 – 2003 வரை பதவி வகித்துள்ளார். பின்னர் 2009ம் ஆண்டு மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது, சிபிஐ அவரது வீட்டில் சோதனை நடத்தியது. 1.5 கிலோ தங்கம், 80 கிலோ வெள்ளி மற்றும் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை அப்போது பறிமுதல் செய்யப்பட்டன. 2010ம் ஆண்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகும் கூட 2016ம் ஆண்டில் உலக மெடிக்கல் அசோஷியேஷன் (WMA) தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று அவரது விக்கிப்பீடியா சுய விவரக் குறிப்பு கூறுகிறது.

Ketan Desai Wikipedia profile

இவர் 2009ம் ஆண்டு முதலாகவே, நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்து வரும் நபர்களில் ஒருவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்காக, முடிந்த வரை லாபி செய்ததாகவும் அவரே ஊடகப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

Ketan Desai Interview -TOI Link

இதேபோல, பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையிலும் அவர் மீண்டும் மீண்டும் MCI நிர்வாகக் குழுவில் இடம்பெறுவதை ஊடகங்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

TOI Article Link

இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவரும் விவரம்,

1) கேதன் தேசாய் குஜராத் மெடிக்கல் கவுன்சில் உறுப்பினராக நீண்ட காலமாக உள்ளார். எனினும், 2014ல் மோடி பிரதமரான பிறகு, அவர் குஜராத் மெடிக்கல் கவுன்சில் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

2) அடுத்தப்படியாக, 2010ம் ஆண்டு சிபிஐ அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளது. அதில், ஒன்றரை கிலோ தங்கம், கணிசமான அளவு வெள்ளி மற்றும் ரூ.35 லட்சம் ரொக்கம் ஆகியவை மட்டுமே கைப்பற்றப்பட்டன. ஆனால், 1300 கிலோ தங்கம், 850 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றெல்லாம் பகிரப்படும் தகவல் தவறாகும்.

3) இந்திய மெடிக்கல் கவுன்சிலில் தடைகளை கடந்து மீண்டும் மீண்டும் இடம்பெறுவதை தேசாய் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அதனை அவரே பலமுறை ஊடகங்களிலும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு கொண்டு வந்ததில், மத்திய அரசு வட்டாரங்களில் அவரால் முடிந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்தியுள்ளார் என்றும் தெளிவாகிறது.

இவற்றின் அடிப்படையில், மேற்கண்ட தகவலில், பாதி உண்மை, பாதி பொய் சேர்த்து பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

கேதன் தேசாய்க்கு முட்டுக் கொடுக்கும் வகையில் இந்த ஃபேக்ட்செக் வெளியிடவில்லை. அவசர கதியில் வாட்ஸ்ஆப்பில் வரும் ஃபார்வேர்ட் செய்தியை சரிபார்க்காமல் அப்படியே வாந்தி எடுப்பது போல, ஒரு முன்னணி நியூஸ்பேப்பர் செய்தியாக வெளியிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் நோக்கிலேயே இந்த கட்டுரையை வெளியிட்டோம் என்றும் தெளிவுபடுத்துகிறோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:கேதன் தேசாய் பெயரை குறிப்பிட்டு அவசர கதியில் பகிரப்படும் வாட்ஸ்ஆப் வதந்தியால் சர்ச்சை…

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading