இந்துத்துவா மற்றும் இந்து மக்கள் ஒருநாள் உலகை ஆள்வார்கள் என்று லியோ டால்ஸ்டாய் கூறினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’இந்துத்துவா மற்றும் இந்து மக்கள் ஒருநாள் உலகை ஆள்வார்கள் என்று லியோ டால்ஸ்டாய் கூறியுள்ளார். இதேபோல, ஏராளமான பிரபலங்கள் இந்து மதத்தைப் பாராட்டியுள்ளனர்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.

இதே தகவலை பலரும் வாட்ஸ்ஆப் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் காண முடிந்தது.

Facebook Claim Link I Archived Link

இந்த பதிவில் கூறப்பட்டுள்ள தகவலை மீண்டும் கீழே இணைத்துள்ளோம்.

*_”நான் சொல்லவில்லைங்க!”_* *மேலைநாட்டு மேதைகளின் இந்த வரிகளைப் படித்திருக்கிறீர்களா?* 

*1. லியோ டால்ஸ்டாய் (1828-1910)*

*”ஹிந்துத்துவமும்  ஹிந்துக்களும் ஒரு நாள் இவ்வுலகை ஆள்வர். ஏனெனில் அதில் அறிவும் ஞானமும் இரண்டறக் கலந்துள்ளன.* 

*2. ஹெர்பர்ட் வெல்ஸ் (1846-1946)*

*ஹிந்துத்துவம் நன்கு உணரப்படும் வரை எத்தனை தலைமுறைகள் கொடுமைகளையும், கொலைகளையும் சந்திக்கப் போகின்றனவோ!*

*ஆனால் உலகம் ஒருநாள் இந்துத்துவாவால் ஈர்க்கப்படும்.  அந்த நாளில் தான் உலகம் மனிதர்கள் குடியேறி வாழ்வதற்கான இடமாக மாறும்.*

*3. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(1879-1955)*

*யூதர்கள் செய்யமுடியாத செயல்களை அவன்(?)* *தன்னுடைய*

*அறிவாலும் ஆற்றலாலும் செய்தான்.*

*ஆனால் இந்து மதத்தில் மட்டுமே அமைதியை நோக்கி அழைத்துச் செல்லும் சக்தி இருக்கிறது.*

*4. ஹூஸ்டன் ஸ்மித் (1919)*

*நாம் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் விட இந்துத்துவா அதிக நம்பிக்கை தரவல்லது.*

*நாம் நம்முடைய எண்ணங்களையும் உள்ளங்களையும் இந்துத்துவாவை நோக்கித் திருப்ப இயலுமானால், அது நமக்கு நன்மை பயக்கும்.*

*5. மைக்கேல் நாஸ்டர்டாமஸ் (1503-1566)*

*இந்து மதமே ஐரோப்பாவின் ஆட்சி மதமாக மாறும்.  ஐரோப்பாவின் புகழ்பெற்ற பெருநகரம் இந்துத் தலைநகரமாக ஆகும்.*

*6. பெர்ட்ரேண்ட் ரசல் (1872-1970)*

*நான் இந்து சமயத்தைப் பற்றிப் படித்தேன்.  இந்த உலக முழுவதிலும் உள்ள மனித குலத்திர்கான மதம் அதுவே என உணர்கிறேன்.  இந்து சமயம் ஐரோப்பா முழுவதும் பரவும்.  இந்து சமயத்தைப் பற்றி ஆராயும் அறிஞர்கள் பலர் ஐரோப்பாவில் தோன்றுவார்கள். இந்துக்கள் தான் உலகை வழி நடத்திச் செல்வார்கள் என்ற நிலை ஒருநாள் உருவாகும்.*

*7. கோஸ்டா லோபான் (1841-1931)*

*இந்துக்கள் அமைதியையும் சமரசத்தையும் பற்றி மட்டுமே பேசுகின்றனர்.  நான் கிறிஸ்தவர்களை மாற்றத்தைப் போற்றி அதில் நம்பிக்கை வைத்து வருமாறு அழைக்கிறேன்.*

*8. பெர்னார்ட் ஷா (1856-1950)*

*ஒரு நாள் இந்த உலகம் முழுவதும் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளும்.*

*இந்து சமயத்தின் உண்மையான பெயரை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதன் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவே செய்யும்.*

*மேற்கத்திய நாடுகள் நிச்சயம் ஒருநாள் இந்து சமயத்தை ஏற்பர்.  கற்று உணர்ந்தவர்களுடைய சமயம் இந்து சமமாகவே இருக்கும்.*

*9. ஜோஹன் கேய்த் (1749-1832)*

*இன்றில்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் நாம் இந்து சமயத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.  ஏனெனில் அதுவே உண்மையான சமயம்.*

*தங்கள் தொடர்புகள் அனைத்திற்கும் இந்த தகவலை விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாமே..* 🙏🏻🙏🏻🙏🏻 

இவ்வாறு நீண்ட பதிவில், லியோ டால்ஸ்டாய், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்டோர் இந்து மதத்தைப் பற்றி புகழ்ந்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவலில் கூறப்பட்டுள்ளதைப் போல, முதலில், லியோ டால்ஸ்டாய் இந்து மதம் பற்றி ஏதேனும் கூறியுள்ளாரா என விவரம் தேடியபோது, அப்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாறாக, கிறிஸ்துவம் பற்றியும், அவருக்கு இருந்த சில நம்பிக்கைகள் பற்றியும் விரிவாக What I Believe என்ற தலைப்பில் லியோ டால்ஸ்டாய் எழுதியுள்ளதாக, தெரியவந்தது. அவர் இந்துத்துவம் பற்றியோ, இஸ்லாம் பற்றியோ எதுவும் எழுதவில்லை. அவரது காலத்தில், அவர் வாழ்ந்த நிலப்பரப்பில் கிறிஸ்தவம் மட்டுமே அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றாக இருந்தது என்பதை இதன்மூலமாக அறிந்திடலாம்.

அடுத்தப்படியாக, Herbert George Wells , Albert Einstein, Huston Smith, Michel de Nostredame உள்பட யாருமே, இந்து மதம் பற்றியோ, இந்துத்துவா பற்றியோ பெருமைப்படுத்தி அல்லது பாராட்டி எதுவும் கூறவில்லை. அப்படி கூறியதாக எந்த ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை. குறிப்பாக, நாஸ்டர்டாமஸ் வாழ்ந்த காலம் 1500களில். அப்போது, இந்துத்துவம் என்ற சொல்லாடல் உலகம் முழுக்க இருந்ததா என்பதே சந்தேகம்தான்.

இந்துத்துவா என்ற வார்த்தைப் பிரயோகம், 1923ம் ஆண்டுக்குப் பிறகே பிரபலமடைந்தது. அதற்கு காரணம், VD Savarkar இதுபற்றி தொடர்ச்சியாக எழுதியதுதான். ஒருவேளை இந்த அறிஞர்கள், இந்து மதம் பற்றி கருத்து தெரிவித்திருந்தாலும், அது இந்து மதத்தை பாராட்டும் வகையில் இருக்க வாய்ப்பில்லை. காரணம், அவர்கள் சார்ந்த கிறிஸ்தவ மதத்தையே அவர்கள் விமர்சித்திருக்கிறார்கள் என்ற சூழலில், அவர்களது நாட்டிற்கு தொடர்பில்லாத இந்து மதம் பற்றி புகழ்ந்து பேசியிருப்பார்கள் என்று கூறுவதில் நம்பகத்தன்மை இல்லை.

அதேசமயம், இந்து மதம் பற்றியும், அதன் கொள்கைகளைப் பற்றியும் புகழ்ந்து சில மேற்கத்திய அறிஞர்கள் பேசியிருக்கிறார்கள். அதுதொடர்பான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

hinduwisdom.info quotes

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:இந்துத்துவா மற்றும் இந்து மக்கள் ஒருநாள் உலகை ஆள்வார்கள் என்று லியோ டால்ஸ்டாய் கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading