இஸ்ரேல் படையினரைத் தேடித் தேடி வேட்டையாடும் ஹமாஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்ரேல் நாட்டு ராணுவ டாங்கை பாலஸ்தீன படையினர் தாக்கி கைப்பற்றுவது போன்று வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், "இஸ்ரேல் படையினரை தேடி தேடி வேட்டையாடும் ஹமாஸ்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ 2023 அக்டோபர் 31ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நாளுக்கு நாள் மோசடைந்து வரும் நிலையில், இஸ்ரேலின் ராணுவ டாங்கை ஹமாஸ் கைப்பற்றியதாகக் குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். வீடியோவை பார்க்கும் போது இப்போது எடுக்கப்பட்டது போல இல்லை. ஆங்காங்கே பொம்மைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. எனவே இதை பார்க்கும் போது ஒத்திகை வீடியோ போல உள்ளது. எனவே, இதை ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2021ம் ஆண்டிலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இஸ்ரேல் ராணுவத்தை வீழ்த்திய பாலஸ்தீனம் என்பது போன்று பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த வீடியோ தொடர்பான முழுமையான தகவல் கிடைக்கவில்லை.

Archive

இந்த வீடியோவில் உள்ள வேறு வேறு காட்சிகளின் புகைப்படத்தைக் கூகுளில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பாலஸ்தீனம் மேற்கொண்ட முதலாவது ராணுவ ஒத்திகை என்று குறிப்பிட்டு இந்த வீடியோவில் உள்ள காட்சியுடன் 2020ல் செய்தி ஒன்று வெளியாகி இருப்பது நமக்குக் கிடைத்தது. தொடர்ந்து தேடிய போது 2020ல் பாலஸ்தீனம் நடத்திய ராணுவ ஒத்திகை என்று வௌியான பல செய்திகளில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போன்ற காட்சிகளைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: middleeastmonitor.com I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள வீடியோ 2023 இஸ்ரேல் - ஹமாஸ் போரின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020ல் இருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதையும், பாலஸ்தீனம் மேற்கொண்ட போர் ஒத்திகை இது என்று சில செய்திகளும் நமக்குக் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் இஸ்ரேல் படையை வேட்டையாடும் ஹமாஸ் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது!

முடிவு:

2020ம் ஆண்டு பாலஸ்தீனம் மேற்கொண்ட ராணுவ ஒத்திகையை 2023 இஸ்ரேல் ஹமாஸ் போர் காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘இஸ்ரேல் படையினரை வேட்டையாடும் ஹமாஸ்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False