குஜராத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மழை நீர் கொட்டும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: x.com I Archive 1 I Facebook I Archive 2

விளையாட்டரங்கம் ஒன்றில் நாற்காலிகள் மீது மழை நீர் கொட்டும் வீடியோ எக்ஸ் போஸ்டில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "குஜராத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் வாங்கினால் இலவச ஷவர் பாத்

ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் ஆவது உருப்படியா கட்டி இருக்கீங்களா வீணா போறவங்களா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.


"இந்த ஸ்டேடியத்தின் பெயரை சரியாக சொல்பவர் கணக்கில் 29/02/2025, நள்ளிரவு 12 மணிக்கு 15 லட்சம் வரவு வைக்கப்படும்..." என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பலரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மக்கள் அமரும் இடத்தில் மழை நீர் கொட்டியதாக சமூக ஊடகங்களில் பலரும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். கட்டுமானத்தில் முறைகேடு என்று பலரும் இந்த வீடியோ தொடர்பாக விமர்சித்து வருகின்றனர். இது குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியம் என்பதற்கு எந்த எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பதிவை ஆய்வு செய்தோம்.


உண்மைப் பதிவைக் காண: ixigua.com

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது சீன ஊடகங்களில் இந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சியை வைத்து வெளியிடப்பட்ட செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதை கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அப்போது சீனாவின் இன்னர் மங்கோலியாவில் உள்ள ஹோஹோட் மைதானத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது மழை பெய்ததாகவும், மைதானத்தில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மக்கள் அவதியுற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் வெளியிட்டிருந்த படத்தில் ஒருவர் முகம் சிறிது தெளிவாகத் தெரிந்தது. பார்க்க சீனர்கள் போல இருந்தார்.


உண்மைப் பதிவைக் காண: finance.sina.cn I Archive 1 I 162re.com I Archive 2

மேலும் சீன ஊடகங்கள், சீன சமூக ஊடகங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ ஹோஹோடில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை; சீனாவைச் சார்ந்தது என்பது உறுதியானது.


உண்மைப் பதிவைக் காண: instagram.com

அடுத்ததாக குஜராத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் மழை பெய்து, போட்டி அல்லது நிகழ்ச்சி பாதிக்கப்பட்டதாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. இந்த வீடியோ குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று எந்த தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோவை இந்தியாவின் குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் கட்டுமானத்தில் முறைகேடு என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Claim Review :   குஜராத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மழை நீர் கொட்டும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?
Claimed By :  Social Media Users