FACT CHECK: ஜிஎஸ்எல்வி ராக்கெட் பயணம் தோல்விச் செய்தியில் மோடி படத்தை சன் நியூஸ் வெளியிட்டதா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட் பயணம் தோல்வி தொடர்பான சன் நியூஸ் தமிழின் நியூஸ் கார்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் படங்களுடன் கூடிய சன் நியூஸ் தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “GSLV F-10 ராக்கெட் பயணம் தோல்வி! ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி F-10 ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறால் திட்டம் தோல்வியடைந்தது என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

நிலைத் தகவலில், “என்னானு தெரியல, ஜீ க்கும் ராக்கெட் சயின்ஸ்க்கும் ஏழாம் பொருத்தமாவே இருக்கு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை மின்னல் அலி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 12ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்புக்கு எதற்காக பிரதமர் மோடியின் படத்தை வைத்தார்கள் என்பது தெரியவில்லை. வெற்றி, தோல்வி என அனைத்துக்கும் பிரதமர் மோடியே பொறுப்பு என்று இப்படி வைத்திருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் இந்த பதிவுக்கு கமெண்ட் செய்து வரும் சிலர் “செய்திக்கு சன் நியூஸ்க்காரன் செலக்ட் பண்ணிய போட்டோ தான் தரம்” என்று புகழ்ந்திருந்தனர். 

ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்விக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்ற வகையில் சிலர் கமெண்ட் செய்திருப்பதும், பதிவிட்டிருப்பதையும் காண முடிந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.

உண்மையில் சன் நியூஸ் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு வெளியிட்டதா என்று பார்த்தோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு அதில் இருந்தது. பிரதமர் மோடியின் படத்துக்கு பதில் இஸ்ரோ தலைவர் சிவன் புகைப்படம் அதில் இருந்தது. சிவன் புகைப்படத்தை அகற்றிவிட்டு பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்திருப்பது தெரியவந்தது. 

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு ஹெட் மனோஜும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நம்மிடம் உறுதிபடுத்தினார். இதன் அடிப்படையில், சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து பிரதமர் மோடி படத்தை வைத்து தோல்விக்கு அவர்தான் காரணம் என்ற வகையில் சிலர் பதிவிட்டு வருவது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி அடைந்தது தொடர்பான நியூஸ் கார்டில் பிரதமர் மோடி படத்தை சன் நியூஸ் பயனப்படுத்தியதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜிஎஸ்எல்வி ராக்கெட் பயணம் தோல்விச் செய்தியில் மோடி படத்தை சன் நியூஸ் வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •