‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்பட இயக்குனர் புதியவன் ராசையா பற்றி பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

சமூக ஊடகம் | Social

‘’பிரபாகரன் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பவர்களை ஒற்றைப் பனைமரம் படத்தில் அம்பலப்படுத்தியுள்ளோம்,’’ என்று அதன் இயக்குனர் புதியவன் ராசையா பேட்டி அளித்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ்கார்டில், ‘’ஒற்றைப் பனைமரம்- உண்மைச் சம்பவம்! இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கிறது ஒற்றைப் பனைமரம். இப்படத்தில் மாவீரன் பிரபாகரன் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் சிலரையும் அம்பலப்படுத்தியுள்ளோம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதேபோன்று, புதிய தலைமுறை லோகோவுடன் ஒரு நியூஸ்கார்டு பகிரப்படுகிறது. 

Claim Link 1 l Claim Link 2 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், News 7 Tamil டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் கேட்டபோது, ‘’இவ்வாறு நாங்கள் எந்த செய்தியும் வெளியிடவில்லை. இது எங்களது பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு,’’ என்று தெரிவித்தார். 

மேலும், அவர்களது X வலைதள பக்கத்தில் இதுபற்றி மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அடுத்தப்படியாக, புதிய தலைமுறை தரப்பிலும் (24 Oct 2024, 3:25 pm) மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதைக் கண்டோம். 

இதுதவிர கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்பட இயக்குனர் புதியவன் ராசையா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் முழு விவரம் இதோ… 

இதில் எங்கேயும் அவர் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டுகளில் உள்ளது போன்று, பேசியிருக்கவில்லை. 

எனவே, புதியவன் ராசையா பேசாத ஒன்றை வேண்டுமென்றே அவரது பெயரில் பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்பட இயக்குனர் புதியவன் ராசையா பற்றி பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

Written By: Pankaj Iyer  

Result: False