சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட மழை, வெள்ளம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ The situation in Chennai: *Heavy Rains and Flooding in Chennai* Marina Beach, Chennai, Cyclone Fengal Effect. மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்னை மக்கள்!🤫
சென்னையில் மழை பெய்த சுவடே இல்லை.
@mkstalin
Marina’s beach road
#CycloneFengal,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2024, செப்டம்பர் மாதம் சௌதி அரேபியா நாட்டில் உள்ள Jeddah என்ற நகரில் ஏற்பட்ட மழை வெள்ளம் என்பதற்கான ஆதாரங்கள் காணக் கிடைத்தன. 

News Flare l MSN l SA Gov 

கூடுதலாக, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஃபேக்ட்செக் குழு (@tn_factcheck) இதுதொடர்பாக மறுப்பு வெளியிட்டுள்ளது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

TN Fact Check X Post 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

Written By: Pankaj Iyer  

Result: False