‘’துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:-Users-parthiban-Desktop-dubai 2.png

Facebook Link I Archived Link

தனுஷ் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூலை 10, 2019 அன்று இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இதில், துபாய் பற்றி தெரியாத 10 விசயங்கள் என்று கூறி, அந்நாட்டின் தொழில், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு முறை, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை பற்றி பட்டியலிட்டுள்ளார். அதேசமயம், துபாய்க்கு தான் இதுவரை சென்றதில்லை எனவும், இந்த வீடியோவில் பேசும் நபர் கூறுகிறார். இருந்தபோதிலும், இந்த வீடியோவை உண்மை என நம்பி பல ஆயிரக்கணக்கானோர் வைரலாக ஷேர் செய்துவருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பற்றி அதன் கீழேயே துபாயில் வசிக்கும் நபர்கள் பலரும் கமெண்ட் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும், இந்த வீடியோவில் கூறியுள்ள தகவல்களில் பெரும்பாலானவை பொய்யானவை என்றும், இப்படி தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனினும், நமது ஃபேஸ்புக் பதிவர் இந்த வீடியோவை அகற்றாமல் வைத்துள்ளார். அந்த கமெண்ட்களில் சில ஆதாரத்திற்காக, இதோ கீழே இணைக்கப்பட்டுள்ளன.

C:-Users-parthiban-Desktop-dubai 3.png

இதில் இருந்தே இந்த வீடியோ தவறான தகவல்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தாலும், ஆதாரம் என்ற முறையில் முதலில், இவர்கள் கூறுவதுபோல, துபாய் என்பது தனி நாடா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு மாநிலமா, இதனை ஆட்சி செய்பவர்கள் யார் உள்ளிட்ட தகவல்களை தேடிப் பார்த்தோம்.

இதன்படி, துபாய் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பார்த்ததில், இது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு மாநிலம் என்ற தகவல் கிடைத்தது. இந்த பகுதியை அல் மக்தோம் அரச பரம்பரையினர் ஆட்சி செய்து வருவதாகவும், இவர்களின் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் தவிர மேலும் பல்வேறு தொழில்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுபற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:-Users-parthiban-Desktop-dubai 4.png

இதேபோல, துபாயில் கொத்தடிமை முறை எதுவும் பரவலாக இல்லை என தெரியவருகிறது. அந்த பகுதிக்கென பிரத்யேக தொழிலாளர் சட்டம், அதை பாதுகாக்க தொழிலாளர் ஆணையம், சட்ட அமைப்பு, போலீஸ் நிர்வாகம், மனித உரிமைகள் ஆணையம் என நிறைய கட்டமைப்புகள் உள்ளன.

C:-Users-parthiban-Desktop-dubai 5.png

இதுதவிர, 2018ம் ஆண்டில் உலக அளவில் பெரிய மற்றும் சேவை வழங்கும் விமான நிலையங்கள் பட்டியலில், துபாய் 12வது இடத்தில் உள்ளது. மேற்கண்ட வீடியோவில் 7வது இடம் என்று சொல்கிறார்கள். அதுவும் தவறான தகவல்.

C:-Users-parthiban-Desktop-dubai 6.png

இதுதவிர, துபாயில் தண்டனைச் சட்டம் சற்று கடுமையானதுதான். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

கடலின் நடுவே அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா ஓட்டலின் உச்சியில் டென்னிஸ் கோர்ட் உள்ளதாகக் கூறுகின்றனர். உண்மையில் அது புர்ஜ் கலிஃபா இல்லை. டென்னிஸ் கோர்ட் கொண்டுள்ள அந்த ஓட்டல் புர்ஜ் அல் அராப் ஜூமைரா ஆகும்.

C:-Users-parthiban-Desktop-dubai 7.png

இதேபோல, கடலில் செயற்கை தீவுகளை அதி நவீன வசதிகளுடன் துபாய் அரசு நிறுவும் பணிகளை மேற்கொண்டு வரும் தகவல் உண்மைதான். இது 2001ம் ஆண்டில் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது, மேற்கண்ட வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்களில் பெரும்பாலானவை தவறாகும். இந்த வீடியோவை துபாயில் வசிக்கும் நபர்களே பலர் மறுத்து கமெண்ட் பகிர்ந்துள்ளனர். தவறான தகவல்களை பாதி கலந்து துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள், என இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளனர். இவை உண்மையில் அதிர்ச்சி தகவல்கள் இல்லை. சாதாரண தகவல்கள்தான். மேலும், வீடியோவில் பேசும் நபர் நான் இன்னமும் துபாய்க்கு சென்றதில்லை எனவும், தெரிந்தவற்றை குறிப்பிடுகிறேன் எனவும் கூறுகிறார். உண்மையில், இந்த வீடியோவில் நம்பகத்தன்மை இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்: குழப்பம் ஏற்படுத்தும் ஃபேஸ்புக் வீடியோ

Fact Check By: Pankaj Iyer

Result: Mixture