‘’கலப்புத் திருமணம் செய்வோருக்கு ரூ.2.50 லட்சம், பாஜக மோடி அரசு வழங்கும்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதில், ‘’ஹரியானா மாநிலம் போல் தமிழகத்திலும் கலப்புத் திருமணம் செய்வோருக்கு ரூ.2.50 லட்சம், பாஜக மோடி அரசு வழங்கும்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என்று நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
முதலில், ஹரியானா மாநிலத்தில் இப்படி ஏதேனும் நிதி உதவி, கலப்புத் திருமணம் செய்வோருக்கு வழங்கப்படுகிறதா என்று தகவல் தேடினோம்.

அப்போது, இது உண்மைதான் என்று தெரியவந்தது.

Haryanascbc.gov.in Link

அதேசமயம், இதேபோன்ற நிதி உதவி வழங்குவது மற்றும் இதர நலத் திட்டங்கள், தமிழ்நாட்டிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

TNSocialwelfare.org Link

ஆனால், பாஜக இப்படி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 அறிக்கையில் குறிப்பிட்டதா என்றால், இல்ல என்பதுதான் பதில்.

இதுபற்றி நாம் பாஜக.,வில் மாநில செய்தித் தொடர்பாளர் அஸ்வாத்தமன் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். இந்த செய்தியை பார்வையிட்ட அவர், ‘’இப்படி எந்த நிதி உதவி அறிவிப்பையும் கலப்புத் திருமணம் தொடர்பாக நாங்கள் வெளியிடவில்லை. இது எங்களது பெயரில் வேண்டுமென்றே பரப்பப்படும் வதந்தியாகும். ஹரியானாவில் தற்போது பாஜக ஆளுங்கட்சியாக உள்ளது என்பதால் இப்படி வேண்டுமென்றே தமிழ்நாடு பாஜக.,வையும் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள். இப்படி தொடர்ந்து எங்களைப் பற்றி வதந்தி பரப்புவோர் மீது போலீஸில் புகார் செய்து, நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்,’’ என்றார்.

இதுபற்றி அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Asuvathaman Allimuthu FB post Link

எனவே, பாஜக தேர்தல் அறிக்கையில் இல்லாத விசயம் ஒன்றை, உண்மை போல தயாரித்து தகவல் பரப்பி, சமூக வலைதள பயனாளர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கலப்புத் திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் தருவோம் என்று பாஜக கூறவில்லை!

Fact Check By: Pankaj Iyer

Result: False