‘திமுகவை அடிக்க நீங்கள் பயன்படுத்தும் செருப்பு சைஸ் என்ன’ என்று விஜயிடம் சிபிஐ கேட்டதா?

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘திமுகவை அடிக்க நீங்கள் பயன்படுத்தும் செருப்பு சைஸ் என்ன’’, என்று விஜயிடம் சிபிஐ கேட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’சரமாரி கேள்வி. திமுகவை அடிக்க நீங்கள் பயன்படுத்தும் செருப்பு சைஸ் என்ன?,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2       

சன் நியூஸ் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த நியூஸ் கார்டில் லோகோ இருக்கும் இடத்தில் இரண்டு பன் உள்ளதைக் கண்டோம். 

இதனை பார்க்கும்போதே எடிட் செய்யப்பட்டுள்ளதா என்று சந்தேகம் எழுகிறது. எனவே, Sun News ஆசிரியர் குழுவில் விசாரித்தோம். அப்போது, ‘’இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு. நாங்கள் வெளியிட்ட செய்தி வேறொன்று,’’ என்று தெரிவித்தனர். 

உண்மையான நியூஸ் கார்டு லிங்க் இதோ…

இதில், ‘’ தண்ணீர் பாட்டிலை வீசியபோது கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா?

வாகனத்தின் மேல் இருந்த உங்களுக்கு, கீழே நிலைமை மோசமானது தெரியவில்லையா? கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு – விஜயிடம் சிபிஐ சரமாரி கேள்வி,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:‘திமுகவை அடிக்க நீங்கள் பயன்படுத்தும் செருப்பு சைஸ் என்ன’ என்று விஜயிடம் சிபிஐ கேட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered

Leave a Reply