தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியதா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை; தடுத்தால் குற்றம்,’’ என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை

தெருநாய்களுக்கு உணவளிப்பது நம் உரிமையும் கடமையும் பொதுமக்கள் உணவூட்டும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உணவூட்டுவதைத் தொந்தரவு செய்தால் உடனே 100 அழைத்து புகார் செய்யலாம்; காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். 

அரசியல் சட்டம் 51A(g), விலங்கு கொடுமைத் தடுப்பு சட்டம் 1960, BNS 325, ABC விதிகள் 2023 ஆகியவை உறுதி செய்கின்றன தெருநாய்களுக்கு உணவளிப்பது உங்கள் உரிமை. தொந்தரவு செய்தால் 100 அழைத்து புகார் செய்யலாம்; காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2  

சன் நியூஸ் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

இதேபோன்று, மற்றொரு நியூஸ் கார்டும் பகிரப்படுவதைக் கண்டோம். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்ற எந்த கருத்தையும் உச்ச நீதிமன்றம் கூறவில்லை, என்று தெரியவந்தது. 

Reuters Link l BBC Link l Supreme Court Observer Link l The Hindu Link 

அடுத்தப்படியாக, Sun News ஊடகம் இதுபோல ஏதேனும் செய்தி வெளியிட்டதா, என்று விவரம் தேடினோம். இவ்வாறு எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. இறுதியாக, அவர்களது டிஜிட்டல் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘’இது எங்களது பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு,’’ என்று தெரிவித்தனர். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டுகள், உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியதா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply