வக்ஃப் சொத்துகளை இந்து அறநிலையத்துறை ஆக்கிரமித்துள்ளது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இந்து அறநிலையத் துறை, இந்து மடங்கள், கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் போர்டு நிலங்கள் மீட்கப்படும் என்று எஸ்டிபிஐ கட்சி தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முபாரக் செய்தியாளர் சந்திப்பு. இந்து அறநிலதுறை மற்றும் மடங்கள், […]

Continue Reading

‘பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை’ என்று எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டாரா?  

‘’பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை’’ என்று எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  கதிர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’ பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை! பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை! தலைவர்கள் தவறு செய்யும்போது திருத்த வேண்டிய இடத்தில் தொண்டர்களாகிய நாங்கள் இருக்கிறோம். – எஸ்.பி.வேலுமணி […]

Continue Reading

‘எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும்’ என்று நெல்லை முபாரக் கூறினாரா?

‘’எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும்,’’ என்று எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில் நெல்லை முபாரக் எங்கேயும் பேசினாரா அல்லது எஸ்டிபிஐ கட்சி எதுவும் செய்தி வெளியிட்டதா […]

Continue Reading

எஸ்டிபிஐ-யை தடை செய்வேன் என்று அமித்ஷா கூறியதாக பரவும் வதந்தி!

“எஸ்.டி.பி.ஐ-யை தடை செய்ய முடிவெடுத்தால் உடனே தடை செய்துவிடுவேன், யாருடைய கருத்தையும் கேட்கமாட்டேன்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “SDPI யை தடை செய்ய முடிவெடுத்துவிட்டால் உடனே தடை செய்துவிடுவேன். மற்றவரின் கருத்தைக் கேட்க நான் […]

Continue Reading

நெல்லைக் கண்ணனை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா அறிவித்தாரா?

நெல்லைக் கண்ணன் கைது செய்யப்படாவிட்டால் மெரினா காந்தி சிலை முன்பு தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்றுடன் திரைப்பட காட்சி கொலாஜ் செய்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை! இன்று இரவுக்குள் நெல்லை கண்ணன் கைது […]

Continue Reading

மதுரை சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கச் சொன்னாரா எச்.ராஜா?

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மதுரை சித்திரை திருவிழாவை தள்ளிவைக்கச் சொன்னதாகக் கூறி, அவரது புகைப்படத்துடன் வெளியான பதிவு ஒன்றை, ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவை சுமார் 4,400க்கும் அதிகமானோர் உண்மை பற்றி யோசிக்காமல் பகிர்ந்துள்ளனர். எனினும், இந்த பதிவை பார்க்கும்போதே சித்தரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என தோன்றியதால், இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: இந்த நாயை என்ன பண்ணலாம்? Archive Link இந்த நாயை என்ன பண்ணலாம்? என தலைப்பிட்டு, […]

Continue Reading