திருப்பதி லட்டு சர்ச்சை; பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?
‘’திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்து மக்களை இழிவுபடுத்திய பியூஷ் மனுஷ்க்கு சேலத்தில் முதல் மரியாதை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இந்த பதிவில் ‘’ நேத்து திருப்பதி லட்டு விவகாராத்தில் ஹிந்துகளை இழிவு படுத்திய பியுஷ் மனுஷ்க்கு சேலத்தில் முதல் மரியாதை
இனிவரும் காலங்களில் இந்துக்களின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வரும். இது ஆரம்பம் தான்..,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருப்பதி லட்டு தயாரிப்பில் மாடு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்படுவதாக, சர்ச்சை வெடித்துள்ளது.
Dinamani Link l Hindustan Times l Times of India
இந்த விவகாரத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் கருத்து கூறியிருந்தார்.
ஆனால், அவரது பேச்சு இந்து மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டு, பாஜக தரப்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் பியூஷ் மனுஷ்க்கு இந்து மக்கள் தண்டனை வழங்கியதாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவை சிலர் பரப்புகின்றனர். உண்மையில் இந்த வீடியோவுக்கும், தற்போதைய திருப்பதி லட்டு விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இது கடந்த 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ. அப்போது, ஃபேஸ்புக் லைவ் ஒன்றுக்காக, பியூஷ் மனுஷ் சேலம் பாஜக அலுவலகத்திற்கு நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கிருந்த பாஜக தொண்டர்கள், அவரை தாக்கினர். இதுபற்றி அப்போது NewsGlitz Tamil ஊடகம் வெளியிட்ட வீடியோவை எடுத்தே இவ்வாறு பரப்புகின்றனர்.
முழு வீடியோ லிங்க் இதோ…
இதுதொடர்பாக மற்ற ஊடகங்களும் அப்போதே செய்தி வெளியிட்டுள்ளன.
BBC Tamil l Puthiyathalaimurai
எனவே, 2019ம் ஆண்டு நிகழ்ந்த வேறொரு பிரச்னை தொடர்பான வீடியோவை எடுத்து, தற்போது நடந்த சம்பவம் என்று கூறி வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram