‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 210 கிலோ தங்க சிலை நிறுவப்பட்டது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற மதுரை கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீ மீனாட்சி அம்மாவின் விக்கிரகம்.🦜’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு செய்தபோது, இந்த தகவல் 2022ம் ஆண்டு முதலாகவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாக, தெரியவந்தது.

அடுத்தப்படியாக, இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, 2020ம் ஆண்டு Chemmanur International Jewellers Madurai சார்பாக, வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம்.

அந்த பதிவில், ‘’உங்களுக்கு மதுரை மீனாட்சி அம்மனின் அருள் கிடைக்கட்டும். மதுரை மீனாட்சி அம்மனின் சிலை, 210 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆசிர்வதிக்கப்பட்ட இச்சிலை எங்கள் ஷோரூமில் வைக்கப்பட்டுள்ளது, ‘’ என்று எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அதே வீடியோ, பகிரப்பட்டுள்ளதையும் கண்டோம்.

இதன்படி, மதுரையில் உள்ள Chemmanur International Jewellers முகப்பில், தங்கம், வெள்ளி கலந்து தயாரிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதனை அந்த நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் வழிபட்டுச் செல்கின்றனர்.

முழு வீடியோ லிங்க் இதோ…

இந்த வீடியோவை எடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்தான் 210 கிலோ எடையில், முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட அம்மன் சிலை நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, கடந்த 2020ம் ஆண்டு முதலே வதந்தி பரப்பி வருகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

இன்றளவும் குறிப்பிட்ட மீனாட்சி அம்மன் சிலை, Chemmanur International Jewellers – Madurai கடையின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. Google Street View Link மூலமாக, இதனை நாம் உறுதி செய்துள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 210 கிலோ தங்க சிலை நிறுவப்பட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: Missing Context