
‘’சவூதி அரேபியாவில் உள்ள தம்மாம் அருகே உள்ள ராக்காவில் நிகழ்ந்த நிலநடுக்கம்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
Facebook Claim Link 4 | Archived Link 4 |
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், பலத்த சத்தத்துடன் கார் நிறுத்துமிடம் ஒன்று நொறுங்கி விழுவது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பலரும்,’’சவூதி அரேபியாவில் உள்ள தம்மாம் அருகே ராக்கா என்கிற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபற்றி வாசகர்கள் பலர் நமக்கு +91 9049053770 என்ற நமது சாட்பாட் எண்ணில் சந்தேகம் எழுப்பியிருந்தனர். எனவே, இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என அறிந்துகொள்ள, சவூதியில் சமீபத்தில் ஏதேனும் நிலநடுக்கம் நிகழ்ந்ததா என்று தகவல் தேடினோம். இந்த கட்டுரை வெளியிடும் நேரத்திற்கு முன்பு வரை அக்டோபர் 28, 2020 மற்றும் ஏப்ரல் மாதம் என 2 முறை சமீபத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்ததாக, செய்தி விவரம் கிடைத்தது.
கூடுதல் தகவலுக்கு News Link 1 I News Link 2
ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் தகவல்கள் அனைத்தும் அக்டோபர் 20, 2020 முதலே பகிரப்பட்டு வருகின்றன. எனவே, குறிப்பிட்ட வீடியோவில் உள்ள காட்சியின் அடிப்படையில், ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது நிலநடுக்கம் இல்லை. வாகன நிறுத்துமிடம் ஒன்று இடிந்து விழுந்த காட்சி என, தெரியவந்தது.
இதுபற்றிய வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
இதன்படி, சவூதி அரேபியாவின் கிழக்கே உள்ள கோபார் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் கார் நிறுத்துமிடம் திடீரென இடிந்து விழுந்தது. அதில், உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. இந்த சம்பவம் கடந்த அக்டோபர் 19, 2020 அன்று நிகழ்ந்துள்ளது.
எனவே, இது நிலநடுக்கமும் இல்லை. தம்மாம் அருகே ராக்கா பகுதியில் நிகழ்ந்ததும் இல்லை. கோபார் பகுதியில் வணிக வளாகம் ஒன்றின் கார் நிறுத்துமிடம் திடீரென சரிந்து விழுந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிதான் இது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி குறிப்பிட்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சவூதி அரேபியாவில் நிலநடுக்கம் என்று கூறி பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
