குளியலறையில் சுய இன்பம் செய்யக்கூடாது: ஐஐடி ரூர்கி பெயரில் பரவும் போலி செய்தி!

கல்வி சமூக ஊடகம்

‘’குளியலறையில் சுய இன்பம் செய்யக்கூடாது,’’ என்று ஐஐடி ரூர்கி கல்வி நிறுவனம் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டதாகக் கூறி, ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Careerindia Tamil எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இது https://tamil.careerindia.com/ இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் இணைப்பாகும். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

ஐஐடி ரூர்கி பெயரில் பகிரப்பட்ட இச்செய்தியால், வாசகர்கள் குழப்பமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இது உண்மையா என ஃபேஸ்புக்கில் தகவல் தேட தொடங்கினோம். அப்போது, உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களின் பேரில் இதுபோன்ற வதந்திகள் பல பரவியுள்ளதை காண நேரிட்டது. ஆம். அதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது, தவறான தகவலாகும். இதுபற்றி நமது மராத்தி பிரிவு ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை செய்து அதன் முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, முதலில், குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் பெயர் இங்கே தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம், அதன் பெயர் Indian Institute of Technology, Roorkee என வரும். நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில், அதன் பெயரை Indian Institute of Roorkee என எழுதியுள்ளனர். இது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.

இதுதவிர ஐஐடி ரூர்கெலாவின் உண்மையான ஹாஸ்டல் வார்டன் வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றையும் காண நேரிட்டது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், நாம் ஆய்வு செய்யும் சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள கையெழுத்தை இந்த உண்மையான ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அது தவறாக இருப்பதைக் காண நேரிட்டது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது, ஐஐடி ரூர்கி பெயரை தவறாக பயன்படுத்தி, யாரோ விஷமத்தனமாக இத்தகைய சுற்றறிக்கையை தயாரித்து வெளியிட்டதாக, தெரியவருகிறது. இதனை உறுதிப்படுத்தாமல், CareerIndia Tamil கொஞ்சங்கூட எவ்வித தயக்கமும் இன்றி ஒரு போலி செய்தியை உண்மை போலவே திரித்து வெளியிட்டுள்ளது. ஒரு ஊடகம் இப்படி தவறான செய்தி வெளியிடுவது வாசகர்களை தவறாக வழிநடத்தக்கூடும் என்பதைக் கூட சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்காமல் இருப்பது வியப்பாக உள்ளது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:குளியலறையில் சுய இன்பம் செய்யக்கூடாது: ஐஐடி ரூர்கி பெயரில் பரவும் போலி செய்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False