FactCheck: பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India தமிழ்நாடு | Tamilnadu

‘’பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் எரிபொருள் விலை குறைப்பு,’’ எனக் கூறி பகிரப்படும் வீடியோ செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

இதில், பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஒன்றின் வீடியோவை பகிர்ந்து, அதன் தலைப்பில், ‘’பாஜக ஆளும் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு ஆனால் தமிழ்நாட்டில் குறைப்பு இல்லை விடியல்😂,’’ என்று எழுதியுள்ளனர். குறிப்பிட்ட வீடியோவில், ‘’மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பை குறைத்துள்ளன. அந்த வரிசையில் பீகார் அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், பாலிமர் லோகோ உள்ளிட்டவை உள்ளதால், பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட அந்த வீடியோவை முதலில் தேடினோம்.

இதன்படி, பாலிமர் வெளியிட்ட வீடியோ கடந்த 2018ம் ஆண்டைச் சேர்ந்ததாகும். மத்திய அரசின் கோரிக்கையின்படி மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரிவிதிப்பில் திருத்தம் செய்து, விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுத்ததாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, 2018ல் வெளியான செய்தியை உண்மை கூட புரியாமல், புதியதுபோல மீண்டும் ஷேர் செய்து வருகிறார்கள் என்று தெளிவாகிறது.

இதுபற்றி மற்ற ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. அதில் சிலவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Puthiyathalaimurai Link I Dinamani Link I Maalaimalar Link I News18 Tamil Link

ஆனால், தற்போது இப்படியான செய்தி எதையும் ஊடகங்கள் வெளியிடவில்லை, அத்துடன், மத்திய அரசும் அறிவிப்பு எதையும் தரவில்லை.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பழைய செய்தியை புதியதுபோல எடுத்து பகிர்ந்து, சமூக வலைதள பயனாளர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False