
‘‘தவெக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் லாட்டரி விற்பனை துவக்கப்படும்,’’ என்று விஜய் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ தவெக ஆட்சிக்கு வந்தால் ஆதவ் அர்ஜூனா மூலம் லாட்டரி விற்பனை மீண்டும் துவக்கப்படும்- விஜய்’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தவறான தகவல், என்று தெரியவந்தது.
இதன்படி, தவெக தலைமைக் கழகம் மற்றும் ஆதவ் அர்ஜூனா தரப்பில் கேட்டபோது, ‘’இதுபோன்ற எந்த அறிவிப்பையும் தவெக தலைவர் விஜய் வெளியிடவில்லை. மேலும், சமீபத்தில் தந்தி டிவியில் வெளியான செய்தி ஒன்றை எடிட் செய்து, இவ்வாறு ஆதவ் பெயரில் வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.

அடுத்தப்படியாக, தந்தி டிவியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் கேட்டபோது, நாங்கள் ஆதவ் அர்ஜூனா பற்றி வெளியிட்ட செய்தி வேறொன்று. அதனை எடிட் செய்து, இவ்வாறு பரப்புகின்றனர்,’’ என்று தெரிவித்தார்.
உண்மையான செய்தியின் லிங்க் இதோ…
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி, தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:தவெக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் லாட்டரி விற்பனை துவக்கப்படும் என்று விஜய் அறிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


