‘’மணிப்பூரில் போலீசாரை தாக்கும் நிர்வாணப் பெண்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

மேற்கண்ட பதிவில், ‘இந்த ஆபாச காட்சிகளை வெளியிட வேண்டாம் என்று தான் நினைதாதேன் ஆனால் இங்குள்ள காங்கிரஸ் திராவிட கட்சிகள் அரசியலாக்க பார்க்கின்றன மணிப்பூரில் நடைபெறும் காட்சிகள் தான் இது ஆனால் செய்திகளோ வெளியே என்னென்னவோ வருகின்றன உண்மை நிலையை மக்களுக்கு ஆதாரங்களோடு வெளியிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதன் கமெண்ட் பகுதியை பார்வையிட்டபோது, காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளதும் தெரியவருகிறது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவு மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. இதையொட்டி, பல இடங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் நிறைய பகிரப்படுகின்றன.

timesofindia link l ndtv link

இந்நிலையில், ‘’பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் யாரும் பாதிக்கப்படவில்லை; மாறாக, பெண்கள்தான் நிர்வாணமாக சுற்றி திரிந்தபடி, போலீசாரைக் கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். உண்மை தெரியாமல், எதிர்க்கட்சிகள் பாஜக மீது வதந்தி பரப்புகின்றன,’’ என்று கூறி, மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பகிர்கின்றனர்.

உண்மையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள வீடியோ மணிப்பூர் மாநிலத்தில் எடுக்கப்பட்டது கிடையாது. இது, சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது நிகழ்ந்த சம்பவமாகும்.

ஆம், அங்குள்ள சண்டௌலி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது போலீசாருக்கும், திருநங்கைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மறு வாக்கு எண்ணிக்கை கோரி, திருநங்கைகள் சிலர் ஆடைகளைக் களைந்து ரகளையில் ஈடுபட்டனர்.

அந்த வீடியோவை எடுத்தே மேற்கண்ட வகையில், மணிப்பூரில் இவ்வாறு போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

இதுபற்றிய செய்தி ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

navbharattimes link

எனவே, உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை, மணிப்பூரில் நடந்ததாகக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மணிப்பூரில் போலீசாரை தாக்கும் நிர்வாணப் பெண் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: MISLEADING