
‘’நடிகை விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

அஇஅதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா இறந்துவிட்டதாகக் கூறி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தகவல் பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த 2021 மார்ச், ஏப்ரல் மாதம், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தில் நடைபெற்றது. பிறகு, வாக்குப் பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கையில், திமுக வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது. இந்த நிகழ்வுகளையொட்டி, சமூக வலைதளங்களிலும் காரசாரமான வாக்குவாதங்கள், தகவல்கள் பகிரப்பட்டன. அதில் ஒன்றுதான் மேற்கண்ட தகவல்.
உண்மையில், விந்தியா உயிருடன்தான் உள்ளார். அவர் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒரு குறிப்பிட்ட தரப்பினர் ஷேர் செய்துள்ளனர்.
இதுபற்றி நடிகை விந்தியா, வேதனையுடன் விளக்கம் ஒன்றையும் ஏற்கனவே அளித்திருக்கிறார். அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இதுதொடர்பாக, ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது.
எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்பட்ட மேற்கண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
