‘’ நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்’’ என்று வானதி சீனிவாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

ஜூனியர் விகடன் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்! நாட்டை நாசமாக்கும் நாட்டு நலனில் சமரசம் செய்துகொள்ளாத யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று பெருமையாக சொல்லலாம். பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், ‘’ரஜினிகாந்த் சங்கி இல்லை,’’ என்று அப்படத்தின் இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது, பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பதில் கூறுவது போல, ‘’நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்’’ என்று வானதி சீனிவாசன் பேசியதாக, மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது.

ஆனால், இவ்வாறு அவர் பேசியதாக, ஜூனியர் விகடன் எந்த செய்தியும் வெளியிடவில்லை. அவர்கள் வெளியிட்ட உண்மையான செய்தி இதோ…

‘சங்கி’ என்ற சொல்லை பெருமைப்படுத்தியே அவர் பேசியுள்ளார்.

உண்மையான நியூஸ் கார்டையும், போலியான கார்டையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு ‘எடிட் செய்யப்பட்டது,’ என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: Altered