
‘’பாகிஸ்தானுக்கு ஆதரவாக, போராட்டம் நடத்திய கேரள முஸ்லீம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ கேரளா முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டு பாக்கிஸ்தான் ஆதரவாக சிந்துநதி நீரை திறந்துவிட கோரி ஆர்பாட்டம் நடத்துகிறார்கள்..
இந்து மக்களே சாதியை கடந்து அரசியலை கடந்து இனியாவது ஒன்று சேருங்கள்…🙏🏻 இவனுங்க பெரும்பான்மையானால் என்ன நடக்கும் விழித்துக்கொள்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சிகளை மீண்டும் கவனித்தோம். அதில், ANOOP ANTONY JOSEPH என்று வாட்டர் மார்க் எழுதப்பட்டுள்ளதைக் கண்டோம்.
இந்த பெயரை அடிப்படையாக வைத்து, தகவல் தேடியபோது கடந்த ஏப்ரல் 19,2025 அன்று கேரளாவைச் சேர்ந்த Anoop Antony Joseph எனும் பாஜக நிர்வாகி, X வலைதளத்தில் மேற்கண்ட வீடியோவை பகிர்ந்துள்ளதைக் கண்டோம்.
ஆனால், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது இந்திய யூனியன் முஸ்லீம்லீக் (IUML) கொடியாகும். பாகிஸ்தான் கொடி கிடையாது. மேலும், வீடியோவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் C.H.Mohammed Koya பெயரை குறிப்பிட்டு, கோஷமிடுவதையும் காண முடிகிறது.
இது மட்டுமின்றி, குறிப்பிட்ட வீடியோவில் காணப்படுவோர் Arangadi என்ற பெயர் இடம்பெற்றுள்ளதையும் கண்டோம். இது கேரளாவில் உள்ள ஊரின் பெயர்.
அடுத்தப்படியாக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அரங்காடி பிரிவு சார்பாக, இன்ஸ்டாகிராமில் ஏப்ரல் 17, 2025 அன்று வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்று நமக்குக் கிடைத்தது.
இதுபோன்ற நிறைய பதிவுகள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணப்படுகின்றன.
இதன்மூலமாகக் குறிப்பிட்ட வீடியோ, அரங்காடி பகுதியை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளால் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பானது என்று நமக்கு தெளிவாகிறது.
இறுதியாக, குறிப்பிட்ட வீடியோவின் முழு உண்மைத்தன்மை பற்றி ஏற்கனவே நமது Fact Crescendo குழுவினர் விரிவான ஃபேக்ட்செக் வெளியிட்டுள்ளனர். அதனையும் ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும், தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கேரள முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினரா?
Written By: Pankaj IyerResult: False
