டேவிட் மில்லரின் மகள் திடீர் மரணமா? அவசர கதியில் பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social விளையாட்டு

‘’தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் திடீர் மரணம்,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்: 

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவிற்கு, ‘’ தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்,’’ என்று தலைப்பிட்டுள்ளனர். இதன்மூலமாக, வாசகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு உள்ளதை உணரலாம்.

அந்த பதிவு உண்மைதான் என்று சிலரும், அதேசமயம், இது தவறாக உள்ளதென்று கூறி சிலரும் கமெண்ட் பகிர்ந்துள்ளதைக் காண முடிகிறது.

மேலும், இந்த ஃபேஸ்புக் பதிவின் கூடவே, தங்களது இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றின் லிங்கையும் பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், உயிரிழந்தவர் டேவிட் மில்லரின் மகள் இல்லை, அவருக்கு தெரிந்த ஒரு சிறுமி என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்தியின் தலைப்பில் கூட டேவிட் மில்லரின் மகள் எனக் குறிப்பிட்டுவிட்டு, செய்தி உள்ளே, வேறு சிறுமி என்று குறிப்பிட்டுள்ளனர். வேண்டுமென்றே இப்படி செய்தி வெளியிட்டார்களா அல்லது தவறாக வெளியிட்டுவிட்டு, பிறகு கன்டென்டை மட்டும் திருத்திவிட்டு, தலைப்பை திருத்தாமல் விட்டனரா என்பது அவர்களுக்கு வெளிச்சம்.

எனினும், ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவின் தலைப்பை அப்படியே விட்டிருக்கிறார்கள்.

அந்த செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Behindwoods Article Link

உண்மையில், இறந்தவர் டேவிட் மில்லர் மகள் இல்லை.


crictracker.com link  

இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி டேவிட் மில்லரே விளக்கம் அளித்துள்ளார். அதில், இறந்தவர் தனது மகள் அல்ல, என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Sports.breeze Instagram Post Link   

அனைத்திற்கும் மேலாக, டேவிட் மில்லர் இந்த கட்டுரை வெளியிடப்படும் நேரம் வரையிலும் திருமணமாகாத நபர் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Cricketer Life Link 

எனவே, உண்மைத்தன்மையை சரிபார்க்காமல், அவசர கதியில் டேவிட் மில்லரின் மகள் மரணம் என்று வதந்தி பரப்புகிறார்கள் என்று உறுதி செய்யப்படுகிறது.

நமது இலங்கைப் பிரிவினர் வெளியிட்ட ஃபேக்ட்செக் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:டேவிட் மில்லரின் மகள் திடீர் மரணமா? அவசர கதியில் பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading