
‘’விராட் கோலி அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர் கழன்றுவிட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர் கழன்றுவிட்டது. 😆😛 @ Adults Only 👀 🏏 ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இருவேறு போட்டிகள் தொடர்பான வீடியோவை எடுத்து, எடிட் செய்து, இவ்வாறு வதந்தி பரப்புகிறார்கள், என்று தெரியவந்தது.
ஆம், மேற்கண்ட வீடியோவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அணிந்துள்ள உடையின் நிறம் வேறாக உள்ளது.
இதன்படி, விராட் கோலி பேட்டிங் செய்யும் காட்சி கடந்த பிப்ரவரி 23, 2025 அன்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டி தொடர்பான ஒன்று.
முழு வீடியோ இதோ…
அடுத்தப்படியாக, பாகிஸ்தான் வீரர் பவுண்டரி எல்லையில் பேண்ட் நழுவ, விழுவது போன்ற காட்சி, கடந்த நவம்பர் 18, 2024 அன்று ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி தொடர்பானதாகும்.
அந்த வீரரின் பெயர் Jahandad Khan.
இதுபற்றிய முழு வீடியோவை cricket.com.au X வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
India Link l Cricket One l Latestly Link
எனவே, இருவேறு கிரிக்கெட் போட்டிகளின் காட்சியை ஒன்று சேர்த்து, தவறான தகவல் பரப்புகின்றனர், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:விராட் கோலி அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர் கழன்றுவிட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
