
‘’ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான்’’, என்று ஆர்.எஸ்.பாரதி ஒப்புக் கொண்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான். அண்ணா பல்கலைக்கழக மாணவியை வன்புணர்வு செய்த ஞானசேகரன் திமுக காரன் தான்; கட்சியை விட்டு நீக்குவது குறித்து தலைமையுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்- ஆர்.எஸ்.பாரதி’’ என்று எழுதப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது புதிய தலைமுறை பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு என தெரியவந்தது. இதுதொடர்பாக, நாம் புதிய தலைமுறை ஆசிரியர் குழு மற்றும் ஆர்.எஸ்.பாரதி அலுவலகம் ஆகியோரிடம் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
முன்னதாக, சட்டமன்றத்தில் ஜனவரி 8, 2025 அன்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல; ஆதரவாளர் மட்டுமே,’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் இதுபோன்ற போலியான நியூஸ் கார்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:‘ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான்’ என்று ஆர்.எஸ்.பாரதி ஒப்புக் கொண்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
