Rapid FactCheck: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த வட இந்திய மாணவரின் ஆங்கிலப் புலமை?- வதந்தியால் சர்ச்சை…

இந்தியா சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’நீட் தேர்வில் முதலிடம் பிடித்த வட இந்திய மாணவரின் ஆங்கிலப் புலமை,’’ என்று தலைப்பிட்டு ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


Facebook Claim Link I Archived Link

இந்த வீடியோ பதிவை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நீட் தேர்வு 2021ல் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், இந்த வீடியோவில் இருப்பவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

 

Aakash.ac.in Link I medicine.careers360.com Link   

குறிப்பிட்ட வீடியோவில் ஆங்கிலம் பேசுபவர், Sukur Ali Ahmed ஆவார். அசாமைச் சேர்ந்த அவர், காங்கிரஸ் கட்சி சார்பாகவும், தற்போது சுயேச்சையாகவும் தேர்தலில் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் இப்படி ஆங்கிலத்தில் உளறியது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக மாறியது. அந்த வீடியோதான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் முழு லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

ANI News Link 

அவர் ஆங்கிலத்தில் இப்படி உளறுவதும், அவரை சமூக வலைதளங்களில் கேலி செய்வதும் வழக்கமான ஒன்றுதான். இதில் ஒரு வீடியோவை எடுத்து, எடிட் செய்து, வேண்டுமென்றே நீட் தேர்வுடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்

Avatar

Title:FactCheck: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த வட இந்திய மாணவரின் ஆங்கிலப் புலமை?- வதந்தியால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer 

Result: False

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel 

Leave a Reply