
2வது முறையாக ஆட்சி அமைக்காவிட்டாலும் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சன் நியூஸ் வெளியிட்டது போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “திட்டவட்டம். தொடர்ந்து 2வது முறையாக திமுக ஆட்சியை அமைக்காவிட்டாலும் எதிர்கட்சியாக செயல்படுவோம். வில்லிவாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க தோல்வியடையலாம் என்று முதலமைச்சரே மறைமுகமாக கூறிவிட்டது போன்று எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அவர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று எல்லோரும் கூறி வரும் நிலையில், இந்த நியூஸ் கார்டு போலியானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
இப்படி ஒரு நியூஸ் கார்டை சன் நியூஸ் வௌியிட வாய்ப்பில்லை. ஆனால், சன் நியூஸ் வெளியிட்டது போலவே இது உள்ளது. எனவே, இதை சன் நியூஸ் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம்.
அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. ஆனால் அதில், “தொடர்ந்து 2வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததில்லை என்பதை உடைத்து இம்முறை ஆட்சியமைப்பேன்” என்று இருந்தது. இதை எடிட் செய்து மாற்றி, விஷமத்தனமான தகவலை சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் “இது போலியானது, நாங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டை மாற்றி, தவறான தகவல் சேர்த்து வதந்தி பரப்பியுள்ளனர்” என்றார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆட்சியமைக்காவிட்டாலும் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


