
‘’அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, எனது ஜட்டி போல உள்ளது என்று நடிகை ஜூஹி சாவ்லா விமர்சனம் தெரிவித்து, ட்வீட் வெளியிட்டுள்ளார்,’’ என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு வாசகர் ஒருவர் இதனை அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
இதே ஸ்கிரின்ஷாட் பதிவை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் மற்றவர்கள் பகிர்வதையும் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா, அவரது பாஜக ஆதரவு நடவடிக்கைகள் காரணமாக, சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்படும் நபர்களில் ஒருவராக உள்ளார்.
இந்த சூழலில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலமாக, வரலாறு காணாத வீழ்ச்சியை (1 டாலர் = ரூ.77.76) சந்தித்து வருகிறது. இதையொட்டி, பாஜக அரசை விமர்சித்து, ‘’நல்லவேளை எனது ஜட்டியின் பெயர் டாலர், ரூபாய் இல்லை. ரூபாயாக இருந்திருந்தால் அடிக்கடி (ஜட்டி) கீழே விழுந்திருக்கும்,’’ என்று ஜூஹி சாவ்லா ட்வீட் வெளியிட்டதாக, மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில், 2013 ஆகஸ்ட் 21ம் தேதி ஜூஹி சாவ்லா, மேற்கண்ட ட்வீட்டை வெளியிட்டிருந்தார். அந்த ட்வீட் பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பகிரப்பட்டதால் அவர் டெலிட் செய்துவிட்டார்.

Juhi Chawla deleted tweet link
அதேசமயம், இதுதொடர்பாக 2013ல் வெளியான மீம்ஸ் பலவற்றை நாம் காண முடிந்தது.


இந்த பதிவை மீண்டும் மீண்டும் ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் புதியது போல குறிப்பிட்டு, சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

tezz buzz link I Bhaskar hindi link
இதே வரிசையில், அவர் அதே நாளில் (2013, ஆகஸ்ட் 21) இன்னொரு பதிவையும் வெளியிட்டிருந்தார். ஆனால், அதனை மட்டும் டெலிட் செய்யாமல் இன்றளவும் அப்படியே வைத்துள்ளார்.
எனவே, 2013ல் ஜூஹி சாவ்லா அப்போதைய காங்கிரஸ் அரசை விமர்சித்து வெளியிட்ட ட்வீட்டை எடுத்து, புதியதுபோல பலரும் தற்போது பாஜக ஆட்சியை குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு; உள்ளாடை போல சரிகிறது என்று ஜூஹி சாவ்லா கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
