‘’ இஸ்ரேல் தலைமையகத்தைக் கைப்பற்றிய பாலஸ்தீன போராளிகள்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Facebook Claim Link l Archived Link

இந்த வீடியோவில் ஆயதங்கள் தரித்த போராளிகள் கூட்டமாக, தரையில் அமர்ந்து அல்லா ஹூ அக்பர் என்ற கோஷத்துடன் பிரார்த்திக்கின்றனர். பிறகு, அவர்கள் ஆங்காங்கே வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி முன்னேறிச் செல்வதையும், கொடிக் கம்பம் ஒன்றில் இருந்து கொடி ஒன்றை கீழே இறக்குவதையும் காண முடிகிறது. பதிவின் தலைப்பில், ‘’ 🔴 பலஸ்தீன முஜாஹிதீன்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றி தக்பீர் அல்லாஹூ அக்பர் என்ற சத்தம் எங்கும் எதிரொலித்தது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் தகவல் தேடியபோது, இதில் காட்டப்படும் கொடிக் கம்பத்தில் பறக்கும் கொடி பார்ப்பதற்கு இஸ்ரேல் கொடியில் இருந்து வேறுபட்டு இருப்பதைக் கண்டறிந்தோம்.

இஸ்ரேல் கொடி எவ்வாறு இருக்கும் என்பதற்கு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.

அதேசமயம், சிரியா நாட்டின் கொடியும் இந்த வீடியோவில் உள்ள கொடியும் ஒத்துப் போவதைக் கண்டோம்.

இதனடிப்படையில் நாம் கூடுதல் தகவல் தேடியபோது, இந்த வீடியோ கடந்த 2015ம் ஆண்டு சிரியா நாட்டில் உள்ள இத்லிப் (Battle of Idlib 2015, March 24-28) என்ற நகரை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றியபோது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

இதுதொடர்பான மேலும் சில செய்தி ஆதாரம் இதோ…

Aljazeera Link l BBC Link

எனவே, 2015ம் ஆண்டு சிரியா நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை எடுத்து, தற்போதைய 2023 இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:இஸ்ரேல் தலைமையகத்தைக் கைப்பற்றிய பாலஸ்தீன போராளிகள் என்று பரவும் தகவல் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False