ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு என்று பகிரப்படும் பழைய புகைப்படம் மற்றும் வீடியோவால் குழப்பம்…

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘கேரளாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு’ என்று கூறி சமூக வலைதளங்கள் மட்டுமின்றி ஊடகங்களிலும் பகிரப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். 

இதன்பேரில், தகவல் தேடியபோது, தனி நபர்கள் மட்டுமின்றி முன்னணி ஊடகங்கள் கூட இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

கேரளாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு இருந்ததாகக் குறிப்பிட்டு, சில நாள் முன்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. 

Indiatoday link l hindustantimes link

இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்வோர் இதனுடன் விமானத்தின் உள்ளே பாம்பு ஒன்று இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியையும் இணைத்து பகிர்வதைக் காண முடிகிறது. உண்மையில், குறிப்பிட்ட புகைப்படம் மற்றும் வீடியோ இதற்கு முன் 2016ம் ஆண்டில் மெக்சிகோ நாட்டில் எடுக்கப்பட்டதாகும். 

முழு வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

abc.net.au link l sun-sentinel.com link 

இதன்படி, மெக்சிகோவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை தற்போதைய நிகழ்வுடன் தொடர்புபடுத்தி பலரும் ஷேர் செய்து வருவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 
முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு என்று பகிரப்படும் பழைய புகைப்படம் மற்றும் வீடியோவால் குழப்பம்…

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading