‘கட்டில் ஆம்புலன்ஸ்’- இந்த வீடியோ குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டதா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’குஜராத்தில் கட்டிலில் சுமந்து செல்லப்படும் நோயாளி- வித்தியாசமான ஆம்புலன்ஸ் சேவை,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:



இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இந்த தகவலை உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி, பாஜக,வை கேலி செய்யும் விதமாக, மேற்கண்ட வீடியோ பதிவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பிட்ட வீடியோ பற்றி நாம் தகவல் தேடியபோது, இது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு வேதனை சம்பவம் என விவரம் கிடைத்தது. ஏற்கனவே ஊடகங்களில் இதுபற்றி செய்தி வெளியாகியுள்ளது. 

இதேபோல, மற்ற ஊடகங்களில் வெளியான செய்தி லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

livehindustan.com link 

அங்கு தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (முதலமைச்சர் ஹேமந்த் சோரன்) ஆட்சி நடைபெறுகிறது. 


எனவே, குஜராத் மாநிலத்திற்கு தொடர்பில்லாத வீடியோ ஒன்றை எடுத்து, தவறான தகவல் சேர்த்து, வதந்தி பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது. 
முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘கட்டில் ஆம்புலன்ஸ்’- இந்த வீடியோ குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading