‘’காவிரி விவகாரத்தில் தமிழ் ஓட்டுநர் தாக்கப்படும் அவலம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Archived Link

பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி நடத்தி வரும் திமுக அரசுக்கும், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மோதல் வெடித்துள்ளது. இது நாளுக்கு நாள் வளர்ந்து, தற்போது கன்னட அரசியல் அமைப்புகள் பலவும் தெருவில் இறங்கி போராடும் அளவுக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Mangalorean Link l Etvbharat link

இந்த சூழலில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாகக் குறிப்பிட்டு பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் மேற்கண்ட வீடியோ பதிவும். உண்மையில், இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல.

இது கடந்த 2016ம் ஆண்டு அப்போது ஏற்பட்ட காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ் ஓட்டுநர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகும்; வீடியோ மட்டுமே பழசு.

எனவே, 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோவை எடுத்து, தற்போதைய அரசியல் பரபரப்புடன் சேர்த்து வதந்தி பரப்புகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:காவிரி விவகாரம்: தமிழ் ஓட்டுநர் தாக்கப்பட்டதாகப் பகிரப்படும் பழைய வீடியோவால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team

Result: Missing Context