சவூதி அரேபியாவில் பாலைவன வெள்ளம் என்று பகிரப்படும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா? 

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’சவூதி அரேபியாவில் பாலைவன வெள்ளம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பாலைவனசோலை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாலைவன வெள்ளம் இப்போதுதான் பார்க்கிறோம். 

இது சவுதி அரேபியாவில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link 

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

வளைகுடா நாடுகளில் தற்போது கன மழை பெய்வதால், ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. 

News18 Link l Hindustan Times Link 

இதையொட்டி, சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்படுகின்றன. 

அந்த வரிசையில் பகிரப்படும் வீடியோவில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவும்… ஃபேஸ்புக் மட்டுமின்றி ட்விட்டரிலும் இந்த வீடியோ பகிரப்படுகிறது. 

ஆனால், இது தற்போது எடுக்கப்பட்டதல்ல. கடந்த 2018ம் ஆண்டு சவூதி அரேபியாவில் உள்ள Tabuk என்ற இடத்தில் ஏற்பட்டதாகும். 

24-horas.mx link 

எனவே, 2018ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோவை எடுத்து, தற்போதைய மழை வெள்ளத்துடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:சவூதி அரேபியாவில் பாலைவன வெள்ளம் என்று பகிரப்படும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Missing Context