உயர்சாதிப் பெண்களை திருமணம் செய்தால் பரிசு என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’உயர்சாதிப் பெண்களை திருமணம் செய்தால் 1 பவுன் தங்கக் காசு மற்றும் ரூ. 60,000 பணம் வழங்கப்படும்,’’ என்று திமுக 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை: சில திருத்தங்கள்! அறிக்கை : 259 தேவர், வன்னியர், கவுண்டர், செட்டியார், நாடார், முதலியார், பிள்ளை, பண்ணையார், முத்தரையர், கோனார் மற்றும் பிற உயர் சாதி வீட்டு பெண்களை காதல் திருமணம் செய்யும் பறையர் சமூக இளைஞர்களுக்கு ஊக்க தொகையாக 1 பவுன் தங்க காசு மற்றும் 60,000 பணம் வழங்கப்படும்.! f MK Stalin mkstalin m.k.stalin mkstalin – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை mkstalin 14-03-2021,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவலில் கூறப்பட்டுள்ளது போன்று, திமுக வெளியிட்ட 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா என்று தகவல் தேடினோம். 

அப்போது, வாக்குறுதி 43, வாக்குறுதி 367, வாக்குறுதி 500 ஆகியவற்றில் திருத்தம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டு, மு.க.ஸ்டாலின் அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்ததைக் கண்டோம். 

இதனை எடுத்து, வேண்டுமென்றே எடிட் செய்து, உயர் சாதி வீட்டு பெண்களை காதல் திருமணம் செய்யும் பறையர் சமூக இளைஞர்களுக்கு ஊக்கத் தொகை தருவோம் என்று திமுக அறிவித்ததாகக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர். 

கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் திமுக ஐ.டி. பிரிவு தரப்பிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:உயர்சாதிப் பெண்களை திருமணம் செய்தால் பரிசு என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Altered