இஸ்லாமியன் என்பதால் விசிகவில் ஓரங்கட்டப்படுகிறேன் என்று ஆளூர் ஷாநவாஸ் கூறினாரா?  

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘இஸ்லாமியன் என்பதால் விசிகவில் ஓரங்கட்டப்படுகிறேன்,’’ என்று ஆளூர் ஷாநவாஸ் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ஓரம் கட்ட படுகிறேன்…
”இஸ்லாமியன் என்ற காரணத்தாலே விசிகவில் நான் ஓரம் கட்ட படுகிறேன்” – ஆளுர் ஷாநவாஸ் விசிக,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது போலியானது, என்று தெரியவந்தது. 

இதுதொடர்பாக, ABP Nadu ஆசிரியர் குழு மற்றும் ஆளூர் ஷா நவாஸ் தரப்பில் பேசி, இது உண்மையல்ல, என்று உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: இஸ்லாமியன் என்பதால் விசிகவில் ஓரங்கட்டப்படுகிறேன் என்று ஆளூர் ஷாநவாஸ் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply