இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடந்தனரா?

‘’இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடக்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பதிவின் ஸ்கிரின்ஷாட்டை வெளியிட்டுள்ளனர். ‘’இத்தாலி நாட்டின் இன்றைய சூழ்நிலை, இறந்தவர்களின் உடலைக் கூட எடுக்க முடியாத நிலை,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி சாகும் முன் எடுத்த புகைப்படம் இதுவா?

‘’இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி கொரோனாவில் சாகும் முன்பாக எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வைரல் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில் இருப்பவர் உண்மையிலேயே டாக்டர்தானா, அவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துவிட்டாரா என்ற உண்மை எதுவும் தெரியாமல், இதே பதிவை மேலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படத்தில் குழந்தைகளுக்கு, கேட்டில் நின்றபடி […]

Continue Reading

இத்தாலி தேவாலயத்தில் விநோத பறவை!- வைரல் வீடியோ உண்மையா?

இத்தாலி தேவாலயம் ஒன்றில் மனிதனைப் போன்று தோற்றமளிக்கும் விநோத பறவை வந்ததாக ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 26 விநாடி ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். சாத்தான் என்று சொல்லப்படுவது போன்று ஒரு உருவம் தேவாலயத்தின் மீது ஏறுகிறது. பின்னர் பறந்து சிலுவையின் மீது அமர்கிறது. பின்னர் சிறகு விரித்து பறக்கிறது.  நிலைத் தகவலில், “இன்று இத்தாலியின் […]

Continue Reading

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள்?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வரன் நேற்று மரணமடைந்தார் ஆனால் தமிழக ஊடகங்களில் செய்தி வெளியிடவில்லை என்று ஒரு பதிவு பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. தற்போதும் வைரலாக பகிரப்படும் அந்த தகவல் சரியா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவர் ஒருவரின் படத்தோடு பதிவு வெளியாகி உள்ளது. அதில், “கண்ணீர் வணக்கம்! கப்பலோட்டிய தமிழன் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெற்ற மகன் வாலேஸ்வரன் நேற்று மரணமடைந்தார்… பாழாய்ப்போன […]

Continue Reading

இந்தியாவின் முட்டாள்தனம் என்று அறிவித்ததா யுனெஸ்கோ? உண்மை அறிவோம்!

சுய ஊரடங்கின் போது, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டும் நிகழ்வில் மக்கள் நடந்துகொண்டது இந்திய வரலாற்றில் முட்டாள்தனமான தருணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யுனெஸ்கோ வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழியாக்கத்தை மேலே வைத்துப் பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், “சுய ஊரடங்கின் போது […]

Continue Reading