இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி சாகும் முன் எடுத்த புகைப்படம் இதுவா?

Coronavirus சமூக ஊடகம்

‘’இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி கொரோனாவில் சாகும் முன்பாக எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வைரல் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதில் இருப்பவர் உண்மையிலேயே டாக்டர்தானா, அவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துவிட்டாரா என்ற உண்மை எதுவும் தெரியாமல், இதே பதிவை மேலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படத்தில் குழந்தைகளுக்கு, கேட்டில் நின்றபடி கைகாட்டுபவர் யார் என்ற விவரம் அறிய, அதனை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, சில விவரங்கள் கிடைத்தன.

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்தியை உண்மை என நம்பி Asianet News Tamil இணையதளம் பகிர்ந்திருந்த செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

Asianet News Tamil Link Archived Link 

ஆனால், இதில் முழு உண்மை இல்லை. எப்படி என கேட்கிறீர்களா? ஆம், இது முதலில் மலேசியாவை சேர்ந்த ஃபேஸ்புக் பயனாளர் ஒருவரால் பகிரப்பட்டதாகும். 

Facebook LinkArchived Link

அவர் மலேசிய மொழியில் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். அதனை ஃபேஸ்புக் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்தபோது, கீழ்க்கண்ட விவரம் கிடைத்தது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்தவர், ‘’இவர் எனது மைத்துனர். மருத்துவராக உள்ள இவர் மலேசியாவில் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் அவரது குழந்தைகளை இப்படித்தான் தொலைவில் இருந்தே பார்ப்பார். இவர் போல ஏராளமானோர் தங்களது உறவுகளை பிரிந்து கொரோனாவைரஸ்க்கு எதிராக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை அல்லா பாதுகாப்பாராக,’’ என எழுதியுள்ளார்.

அவர் மலேசியாவை சேர்ந்தவர் என்பது அவரது ஃபேஸ்புக் அடையாளத்தை வைத்தும், அவர் வெளியிட்ட பதிவு மலாய் மொழியில் உள்ளது என்பதை வைத்தும் உறுதி செய்யப்படுகிறது. 

எனவே, மலேசியாவை சேர்ந்த ஒருவர் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து, இந்தோனேஷியா டாக்டர் இவர் என தாங்களாகவே ஒரு கதையை இணைத்து தவறான செய்தியை பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

Birgaldo Sinaga என்பவர் இதனை முதலில் வெளியிட்டு, பின்னர் ஃபேஸ்புக்கிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். அவர் தனது பதிவையும் நீக்கிவிட்டார். இருந்தும் இந்த தகவல் பல்வேறு மொழிகளிலும் வைரலாக பகிரப்படுகிறது.

இதுதொடர்பாக, இந்தோனேஷியாவை சேர்ந்த ஃபேக்ட்செக் நிறுவனமான Cekfakta.tempo.co உண்மை கண்டறியும் சோதனை செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

Cekfakta.tempo.co Link Archived Link 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி சாகும் முன் எடுத்த புகைப்படம் இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False