‘’ கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா என்று கேட்டு செல்போன் ஹேக் செய்யப்படுகிறது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ அவசர தகவல்

தயவுசெய்து கவனிக்கவும்.

உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளீர்களா ?

என்று கேட்டு,

ஆம் என்றால் 1 ஐ அழுத்தவும் இல்லையென்றால், 2 ஐ அழுத்துவதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும், ஆனால் நீங்கள் 1 அல்லது 2 எண்களை அழுத்தினால், உங்கள் மொபைல் செயலிழந்து, உங்கள் வங்கி விவரங்கள் முழுவதும் மறைந்துவிடும். எனவே உடனடியாக அழைப்பை துண்டிக்கவும். முடிந்தவரை இந்த செய்தியை எல்லா இடங்களுக்கும் அனுப்புங்கள். எல்லா மொபைல்களிலும் விரைவாகப் பரவ வேண்டும்.

சைபர் கிரைம் போலீஸ்-,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று தகவல் தேடினோம். இதன்பேரில், தமிழ்நாடு காவல்துறையை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், ‘’சைபர் கிரைம் காவல் துறை இவ்வாறு சுற்றறிக்கை எதுவும் அனுப்பவில்லை. இது தவறான தகவல். கடந்த 2021ம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் முதல்முறையாக இந்த தகவல் பகிரப்பட்டது. அப்போதே அம்மாநில போலீசார், இது வதந்தி என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். ஆனாலும், சிலர் வேண்டுமென்றே தமிழில் மொழிபெயர்ப்பு செய்து, இதுபோன்ற வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றம்,’’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக, 2021ம் ஆண்டு PIB Fact Check விளக்கம் அளித்திருக்கிறது.

எனவே, 2021ம் ஆண்டு முதலாக பல்வேறு மொழிகளில் பரவும் இந்த வதந்தி தற்போது தமிழ் மொழியிலும் பகிரப்படுவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா என்று கேட்டு செல்போன் ஹேக் செய்யப்படுகிறதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False