நாயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக?- ஃபேஸ்புக் விஷம பதிவு
சென்னையில் நாயை பா.ஜ.க இளைஞன் கற்பழித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
செய்தி ஒன்றின் மொபைல் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், "சென்னையில் பயங்கரம்! நடுரோட்டில் வைத்து நாயைக் கதற கதற கற்பழித்த (பஜக) இளைஞன்!" என்று உள்ளது.
நிலைத் தகவலில், "நாயை கற்பழித்த சங்கீஸ்சென்னையில் ஆட்டை தொடர்ந்து தற்போது நாயின் கற்புகள் சூறயாடபடுகிறது, இதனை அனைவரும் பகிர்ந்து கண்டனங்களை எழுப்பி நாயின் கற்பை காப்பாற்றலாம் வாங்க" என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், செய்தி இணைப்பு அளித்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
படத்தில் உள்ள தலைப்பில் பாஜக என்ற எழுத்துக்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது போல் இருந்தது. மேலும், பா.ஜ.க என்று எழுதுவதற்கு பதில் தவறாக ‘பஜக’ என்று குறிப்பிட்டுள்ளனர். செய்தி லிங்க் உள்ளதால், சம்பவம் உண்மையாக இருக்கலாம் என்று தோன்றியது. அதை திறந்து பார்த்தால், பா.ஜ.க என்று தலைப்பில் குறிப்பிடவில்லை.
செய்தியினுள் நாயிடம் சில்மிஷம் செய்த நபர் பா.ஜ.க உறுப்பினர் என்றோ, நிர்வாகி என்றோ குறிப்பிட்டிருக்கலாம் என்று எண்ணிப் படித்துப் பார்த்தோம். எந்த இடத்திலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்று குறிப்பிடவில்லை.
செய்தியில், "நாயை தன் அருகே இழுத்த அந்த இளைஞர், நடுரோட்டில் வைத்து பலாத்காரம் செய்தான். இதனால் வலி தாங்க முடியாமல் அந்த நாய் அலறியது. பொது மக்கள் வெளியே வந்ததும் கொடூரன் தப்பினான். இதைத் தொடர்ந்து பதிவான சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போததான் அந்த இளைஞன் ஒரு சைக்கோ என்பது தெரிந்தது. இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக தேடியபோது தமிழ் சமயம் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில் புகார் தொடர்பாக சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் அளித்த பேட்டியும் இருந்தது.
அதில், "புகார் தெரிவித்தவர் கொடுத்த சிசிடிவி காட்சிகளில், அந்த நபர் நாயை பாலியல் வன்புணர்வு செய்வதுபோல் காட்சிகளும் இல்லை. அவர் அதிகமாக குடித்துவிட்டு நாயிடம் செல்லம் காட்டுவதுபோல் மட்டுமே இருக்கிறது. ஆனால் அங்கிருக்கும் நபர்கள் நாயை அந்த நபர் பாலியல் வன்புணர்வு செய்வதாக கூறுகின்றனர். எனவே சமந்தப்பட்ட நபரை விசாரிக்கும்போதுதான் உண்மைகள் வெளியாகும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்தியிலும் குற்றம்சாட்டப்பட்டவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்று குறிப்பிடவில்லை.
தமிழ் சமயம் வெளியிட்ட செய்தியில் விலங்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் இயக்குநர் சாய் விக்னேஷ் புகார் அளித்ததாக குறிப்பிடப்பட்டு இருந்ததால், அதன் அடிப்படையில் கூகுளில் தேடினோம். அப்போது ஆல்மைட்டி அனிமல் கேர் டிரஸ்ட் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு கிடைத்தது. அதில், நாயிடம் அத்துமீறிய நீலகண்ணன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
புகார் அளித்த அனிமல் ஆல்மைட்டி கேர் டிரஸ்ட் சாய் விக்னேஷை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், "கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடந்தது. நாயிடம் பாலியல் அத்துமீறல் மேற்கொண்ட நபர் அருகில் உள்ள தேநீர் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் அரசியல் கட்சி எதற்கும் தொடர்பு இல்லை. இந்த வழக்கு தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது" என்றார்.
நம்முடைய ஆய்வில்,
நாயை கற்பழித்த நபர் பா.ஜ.க-வைச் சார்ந்தவர் என்று அந்த செய்தியில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புகார் செய்த விலங்குகள் நல ஆர்வலர் சாய் விக்னேஷ் நடந்த சம்பவத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை என்று உறுதி செய்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சென்னையில் நடுரோட்டில் நாயை கற்பழித்த பா.ஜ.க இளைஞர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.
Title:நாயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக?- ஃபேஸ்புக் விஷம பதிவு
Fact Check By: Chendur PandianResult: False