ஹமாஸ் அமைப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதலில் காசா பகுதியில் ஒரு கட்டிடம் இடிந்து விழுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

கட்டிடம் ஒன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "நொறுக்கப்படும் காசா ...ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Suresh Suresh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 அக்டோபர் 9ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அப்பாவி மக்கள் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த சூழலில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததாக சமூக ஊடகங்களில் பலரும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம். முதலில் வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

Archive

அப்போது, இந்த வீடியோவை 2021ம் ஆண்டில் பல ஊடகங்களும் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. ABC News என்ற ஊடகம் 2021 மே 14ம் தேதி இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், "காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 14 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஊடகம் மட்டுமின்றி Al Jazeera English உள்ளிட்ட ஊடகங்களும் 2021 மே மாதத்தில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தன. இதன் மூலம் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் வீடியோதான் இது என்பது உறுதியானது. ஆனால், இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது இல்லை என்பதும், 2021 வீடியோவை புதிது போல இப்போது பதிவிட்டிருப்பதும் தெளிவானது.

2023 அக்டோபரில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் சமயத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வீடியோ, செய்தி உண்மைதான். ஆனால், 2021ல் நடந்த தாக்குதல் என்று குறிப்பிட்டிருந்தால் தவறான புரிதலைத் தவிர்க்க முடியும்.

முடிவு:

காசாவில் 2021ல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் வீடியோவை 2023ல் நடந்தது போன்று பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகப் பரவும் பழைய வீடியோ…

Written By: Chendur Pandian

Result: MISLEADING