
டூப் போடும் நடிகரை வைத்து மாமல்லபுரத்தில் கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறும் நிகழ்ச்சியை தவெக தலைவர் விஜய் நடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி நியூஸ் கார்டு வடிவில் வெளியிட்ட வீடியோ போன்று ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விரைவில் கரூர் வந்து சந்திப்பதாக விஜய் உறுதியளித்தார் – பாதிக்கப்பட்டவர். விஜயின் டூப்பை வைத்து நிகழ்ச்சி நடத்தியதாக தகவல்! மகாபலிபுரத்தில் நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஆறுதல் கூறும் நிகழ்வில், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய் சந்திக்க தயங்கியதால் சினிமாவில் விஜய்க்கு டூப் போடும் நடிகரை வைத்து நிகழ்ச்சியை தவெகவினர் நடத்தி முடித்ததாகத் தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
நிலைத் தகவலில், “உண்மைய சொல்லுங்கடா.. டூப் எதுவும் போட்டு அப்பாவி மக்களை ஏமாத்திட்டீங்களாடா..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்ட வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து நடிகரும் தவெக தலைவருமான விஜய்யும் ஆறுதல் கூறினார். விஜய் நிகழ்வில் பங்கேற்றவர்கள் அளித்த பேட்டி அடிப்படையில் தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டது பொன்று ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆறுதல் கூறும் நிகழ்வில் பங்கேற்றது நடிகர் விஜய்யே இல்லை என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டது என்று தெரிந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் தந்தி டிவி வௌியிட்டிருந்த பதிவு கிடைத்தது. ஆனால் அதில் டூப் போடப்பட்டது என்றெல்லாம் இல்லை. ““விஜய் அழுது காலில் விழுந்தது உண்மை தான்.. அவரோட உடல், முகம் எல்லாமே… ஆளே வேற மாறி மாறிட்டாரு’’ – நேற்று விஜய்யை பார்த்தவர்கள் கதறல் ” என்று குறிப்பிட்டுப் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டியை வெளியிட்டிருந்தனர். எந்த இடத்திலும் டூப் போடப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. இந்த வீடியோவை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்திருப்பது தெளிவானது.
இதை உறுதி செய்துகொள்ளும் வகையில், இந்த வீடியோ பதிவை தந்தி டிவி டிஜிட்டல் பொறுப்பாளருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
டூப் நடிகரை வைத்து மாமல்லபுரத்தில் ஆறுதல் கூறும் நிகழ்ச்சியை நடத்திய விஜய் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது, தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:டூப் வைத்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி நடத்திய விஜய் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False


