மேற்கு வங்காளத்தில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷ்க்கு திரும்பிச் செல்லும் வீடியோ இதுவா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘’எஸ் ஐ ஆர் கணக்கெடுப்பு நடத்த ஆரம்பித்த பிறகு மேற்கு வங்காளத்தில் இருந்து பல்லாயிரம் ரோஹிங்கியா பங்களாதேஷ் முஸ்லிம்கள் பங்களாதேஷ்க்கு திரும்பிச் செல்லும் வீடியோ🔥,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பயப்படலாம்
ஆனால் இந்த அளவுக்கு தொடர் நடுங்கி பயப்படக்கூடாது
எஸ் ஐ ஆர் கணக்கெடுப்பு நடத்த ஆரம்பித்த பிறகு மேற்கு வங்காளத்தில் இருந்து பல்லாயிரம்
ரோஹிங்கியா பங்களாதேஷ் முஸ்லிம்கள்
பங்களாதேஷ்க்கு திரும்பிச் செல்லும் வீடியோ🔥
இதேபோன்று தமிழ்நாட்டில் இருக்க்கும் முஸ்லிம்கள்
திமுக வுக்கு வாக்களிப்பதை தடுக்கும் என்பதற்காகத்தான் இந்த
எஸ் ஐ ஆர் ஐ எதிர்க்கிறீர்களா 🤔,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

கடந்த 2025, நவம்பர் 9ம் தேதியன்று SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், X வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.  

மு.க.ஸ்டாலின் பதிவுக்கு பதில் கூறும் வகையில், சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் SIR-க்குப் பயந்து, சொந்த நாடான பங்களாதேஷ்க்கு தப்பியோடுவதாக, நாம் ஆய்வு செய்யும் X பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோ கடந்த 2022ம் ஆண்டு வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்றும், இதற்கும், இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்றும் தெரியவந்தது. 

ஆம், கடந்த 2022ம் ஆண்டு Bangladesh town offers new life to climate migrants என்ற தலைப்பில் AP Archive வெளியிட்ட வீடியோதான் இது…

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Al Jazeera l WION l Hindustan Times

எனவே, வங்கதேசத்தில் 2022ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றை எடுத்து, இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசியலுடன் தொடர்புபடுத்தி, தற்போது வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:மேற்கு வங்காளத்தில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷ்க்கு திரும்பிச் செல்லும் வீடியோ இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply