‘’திமுக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’தமிழக அரசுக்கு 5 லட்சம் அபராதம் உச்சநீதிமன்றம் நெம்பர் ஒன் முதல்வருக்கு வந்த சோதனை.. தேவையற்ற வழக்கு - தமிழக அரசுக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் உத்தரவு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2 l Archived Link

News தமிழ் 24 ×7 லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், இதுபற்றி நேரடியாக, News தமிழ் 24 ×7 ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’இது கடந்த 2022ம் ஆண்டு நாங்கள் வெளியிட்ட செய்தி. இதுதொடர்பான வழக்கு விவரம் புரியாமல், சிலர் வேண்டுமென்றே புதிய செய்தி போல, தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்,’’ என்று தெரிவித்தனர்.

அவர்கள் வெளியிட்ட பழைய செய்தியின் லிங்கையும் நமக்கு அளித்தனர். அந்த லிங்க் இதோ…

NewsTamil 24×7 Facebook Link

இதே செய்தி 2022ம் ஆண்டு மற்ற ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. அவற்றையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Thanthi TV l Vikatan Link l News18 Tamil Link l Hindu Tamil

2022ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான் நடைபெற்றது. எனினும், 2 ஆண்டுகளுக்கு முந்தைய செய்தியை எடுத்து, வேண்டுமென்றே புதியது போல குறிப்பிட்டு, திமுக.,வை விமர்சிப்பதற்காக உள்நோக்கத்துடன் மறுபகிர்வு செய்கிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் தற்போது விதித்ததா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISSING CONTEXT