‘’மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடக்கும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Claim Link l Archived Link

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ அடேய் என்ன டா நடக்குது..... ❓ யாருடா நீங்கல்லாம்....😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு, 2024 மக்களவைத் தேர்தலின்போது எடுக்கப்பட்ட வீடியோ போன்றுள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, இது கடந்த 2022ம் ஆண்டு குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று, தெரியவந்தது.

பாஜக ஆதரவாளர்கள் Bhavnagar தொகுதிக்குட்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஒன்றில் நுழைந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் திருத்தம் செய்வதாகக் குற்றம்சாட்டி 2022ம் ஆண்டே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தது.

ஆனால், உடனடியாக, இதற்கு Bhavnagar ஆட்சியர் மறுப்பு தெரிவித்திருந்தார். ‘’இது வழக்கமான தேர்தல் நடைமுறைதான், வாக்குப் பதிவு முடிந்த பிறகு, VVPAT எனப்படும் வாக்குப் பதிவு செய்ததற்கான ரசீதுகளை எடுத்து, தேர்தல் அதிகாரிகள் ஒரு கறுப்பு பையில் சேகரித்து சீல் வைப்பார்கள். இதுதொடர்பான காட்சிகள்தான் மேற்கண்ட வீடியோவில் உள்ளன,’’ என்று அவர் விளக்கமும் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக, நமது ஆங்கில மொழிப் பிரிவினரும் விரிவான ஃபேக்ட்செக் ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர். அந்த லிங்க் இதோ…

Fact Crescendo English Link

இதன்படி, 2022ம் ஆண்டு குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின்போது Bhavnagar தொகுதிக்குட்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஒன்றில் VVPAT எனப்படும் வாக்குப் பதிவு செய்ததற்கான ரசீதுகளை இயந்திரங்களில் இருந்து வெளியே எடுத்து, தேர்தல் அதிகாரிகள் ஒரு கறுப்பு பையில் சேகரித்து சீல் வைத்துள்ளனர். அப்போது எடுத்த வீடியோவை தற்போதைய 2024 மக்களவைத் தேர்தலுடன் தொடர்புபடுத்தி சிலர் வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் வீடியோ தற்போது பகிரப்படுவதால் சர்ச்சை…

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING